Published : 23 Feb 2018 04:24 PM
Last Updated : 23 Feb 2018 04:24 PM

விராட் கோலியின் கள ஆக்ரோஷம்: இர்பான் பத்தான் கலகல!

இந்திய கேப்டன்களிலேயே களத்தில் பல்வேறு விதமாக தனது ஆக்ரோஷத்தை, ஆவேசத்தை உணர்வுகளை திறந்தப் புத்தகமாக வெளிப்படுத்தி வருபவர் விராட் கோலிக்கு தனிச்சிறப்பு இடமுண்டு.

இது குறித்த விவாதங்களே தற்போது முளைவிடத் தொடங்கியுள்ளன, தென் ஆப்பிரிக்க நட்சத்திரம் ஜாக் காலீஸ் கூட சமீபத்தில் விராட் கோலி கொஞ்சம் ஆக்ரோஷத்தை, உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இது எப்போதும் அணிக்கு நன்மைபயக்கும் என்று கூற முடியாது என்று நயமுடன் அறிவுரை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விராட் கோலி களத்தில் எதிரணியினரின் விக்கெட்டுகள் விழும்போது பவுலர், வீரர்கள் ஒரு புறம் கொண்டாட இவர் தனியே வந்து தனது அங்கச் சேஷ்டைகள் மூலம் தனிப்பட்ட முறையில் தன் ஆக்ரோஷ வெளிப்பாட்டை நிகழ்த்தி வருவதும், தொலைக்காட்சி இவரை மையப்படுத்தியே வெற்றி, தோல்வி ஏன் அமைதி, மவுனம் போன்றவற்றைக் கூட கொண்டாடுகிறது என்பதைப் பார்த்து வருகிறோம், இதனை ‘விராட் கோலி சின்ட்ரோம்’ என்று வர்ணித்து இதன் எதிர்மறை அம்சங்களை எழுதியிருந்தோம்.

இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் நடைபெற்ற ஒரு சிறு ஜாலி வீடியோ உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இர்பான் பத்தான் தன் கருத்தைப் பதிவு செய்யும் போது,

“ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒவ்வொரு அணுகுமுறை உண்டு. தாதா (கங்குலி) ஆக்ரோஷம் காட்டுவார், அப்போது இளம் வீரர்கள் அணிக்கு வந்த சமயம். தோனி கேப்டனான போது அவர் கூலான அணுகுமுறையைக் கொண்டு வந்தார். அவரைச் சுற்றி உள்ள வீரர்கள் அவரை எப்போதும் பின்பற்றுவார்கள். எனவே ஒரு அணிக்கு தன்னுடைய இயல்பானவற்றை வெளிப்படுத்தும் கேப்டன் தேவை. விராட் கோலி தானாகவே இருக்கிறார். நிறைய நல்ல விஷயங்களும் கேள்விப்படுகிறோம். இளம் வீரர்களுடன் நன்றாகப் பழகுகிறார், நாம் டின்னர் எடுத்துக் கொள்ளலாம் என்று அழைக்கிறார். கேப்டனுக்கு ‘எக்ஸ்ட்ரா அலவன்சஸ்’ இருக்கிறது” என்றார்.

எக்ஸ்ட்ரா அலவன்சஸ் என்று இர்பான் பத்தான் கூறியதும் உரையாடலில் இருந்த மற்றவர்கள் இதன் பிற அர்த்தங்களைக் கருத்தில் கொண்டு பத்தானை கலாய்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x