Published : 17 Feb 2018 05:42 PM
Last Updated : 17 Feb 2018 05:42 PM

பல மைல்கற்களை எட்டிய விராட் கோலி: ஒரு நாள் தொடரின் சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள்

 

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியும், கேப்டன் விராட் கோலியும் பல்வேறு மைல் கற்களை எட்டியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், ஒருநாள் தொடரில் அசத்திய இந்திய அணி 5-1 என்று கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

செஞ்சூரியன் நடந்த இறுதி மற்றும் 6-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் (129) அபாரமான சதத்தால், இந்தியஅணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. இந்த தொடரில் பல்வேறு சாதனைகளையும் இந்திய வீரர்களும், அணியும் படைத்துள்ளது.

அந்த சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள்:

1. தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த ஒருநாள் தொடரில் 4 முறை இந்திய அணி முதலில் பந்துவீசியுள்ளது இதுதான் முதல்முறையாகும்.

2. கடந்த 2004-05 ஆம் ஆண்டுக்குப் பின் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் 50 விக்கெட்டுகளுக்கு மேல் தென் ஆப்பிரிக்கா இழந்தது இது முதல்முறையாகும். இதற்கு முன் 2004-05 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியுடன் விளையாடியபோது, 53 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

3. இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த சர்வதேச அளவில் முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

4. சச்சின் டெண்டுகல்கருக்கு பின், ஒருநாள், மற்றும் போட்டித் தொடர்களில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 2-வது வீரர் விராட் கோலி ஆவார்.

5. தென் ஆப்பிரிக்க அணி 2-வது முறையாக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இதற்கு முன் கடந்த 2001-02 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை இழந்தது.

6. கேப்டனாக பொறுப்பு வகித்து அதிகமான சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 2-வது இடத்தில் உள்ளார். கோலி மொத்தம் 13 சதங்கள் அடித்துள்ளார்.

7. சர்வதேச அளவில் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 5-வது இடத்தில் உள்ளார்.

8. இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் அதிகமான விக்கெட்டுகள் எடுத்த 2-வது வீரர் என்ற பெயரை குல்தீப் யாதவ் பெற்றார். இவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

9. இரு நாடுகளுக்குஇடையிலான ஒருநாள் தொடரில் அதிகமான விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெயரை யுவேந்திர சாஹ் பெற்றார். இவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

10. 6-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி பெற்ற ஆட்ட நாயகன் விருது அவர் பெறும் 28-வது விருதாகும். இந்திய அளவில் கங்குலி, சச்சினுக்கு பின் அதிகமான ஆட்டநாயகன் விருதை கோலி பெற்றுள்ளார்.

11. இரு நாடுகளுக்குஇடையிலான ஒருநாள் தொடரில் சழற்பந்து வீச்சு மூலம் 33 விக்கெட்டுகளை வீழ்த்திய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.

12. 6-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி அடித்த சதம் அவர் சர்வதேசப் போட்டியில் அடிக்கும் 35-வது சதமாகும்.

13. காலண்டர் ஆண்டில் 500 ரன்களை கடக்க விராட் கோலி 47 நாட்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதற்கு முன் 2003 ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் 500 ரன்களைக் கடக்க 69 நாட்கள் எடுத்ததே மிகக் குறைவானதாக இருந்தது.

14. 6-வது போட்டியில் விராட் கோலி பிடித்த கேட்ச் ஒருநாள் போட்டியில் அவர் பிடித்த 100-வது கேட்ச் ஆக அமைந்தது.

15. இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் அதிகமான ரன்களை குவித்த இந்திய வீரர் எனும் பெருமையை விராட் கோலி பெற்றார். இதற்கு முன் 2015-16 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா 441 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x