Published : 15 Feb 2018 05:00 PM
Last Updated : 15 Feb 2018 05:00 PM

விராட் கோலி, ரோஹித் சர்மாவின் ரன் அவுட் காதல்கள்!

ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே தவறான கணிப்புகளினால் ஏற்படும் ரன் அவுட்கள் அன்றைய போர்ட் எலிசபெத் போட்டியில் நடந்ததுடன் 7-வது முறையாகும்.

இரு வீரர்களும் சேர்ந்து 50 ஓவர்கள் வரை ஆடினால் உலகில் எந்தப் பந்து வீச்சும் சிதறடிக்கப்படும் என்பது சிறு குழந்தைக்குக் கூட தெரியும், இதனால் அணிகள் இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடும்போது ரன்களை, குறிப்பாக சிங்கிள், இரண்டுகளை எடுக்க விடாமல் இறுக்கமான களவியூகங்களை அமைப்பது இயல்பான ஒன்றே.

இந்நிலையில் இருவருக்குமிடையே ஏற்படும் ரன் ஓட்டப் புரிதல் 7 முறை தவறாகியுள்ளது.

பெங்களூர், 2017: இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா ஒரு ரன்னுக்காக அழைத்து பேட்டிங் முனைக்கு ஓடினார், ஆனால் கோலி நகரவில்லை. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பேக்வர்ட் பாயிண்டில் டைவ் அடித்து பீல்டிங் செய்து த்ரோ செய்தார். ரோஹித் சர்மா அவுட் ஆனார்.

எட்ஜ்பாஸ்டன் 2017: இந்த முறையு ரோஹித் சர்மா ரன் அவுட். கோலி பாயிண்டில் தள்ளி விட்டு ஒரு ரன்னுக்கு ஓடினார், ரோஹித்தும் ஓடினார், ஆனால் எப்போதும் கோலி அளவுக்கு இவரிடம் வேகமிருக்காது என்பதாலும், பாபர் ஆஸம் பீல்ட் செய்து அடித்த த்ரோவினாலும் முழு நீள டைவ் அடித்தும் ரோஹித் ரன் அவுட்டாக நேர்ந்தது.

பிரிஸ்பன் 2016: இம்முறை விராட் கோலி 2வது ரன் ஓடும் போது அவுட் ஆனார். இது தவறான புரிதல் என்பதை விட ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்ஸனின் அருமையான பீல்டிங்கினால் ரன் அவுட் ஆனது. ரோஹித் சர்மா இந்தப் போட்டியில்தான் 123 ரன்கள் அடித்தார்.

2014, கொல்கத்தா, உலகச் சாதனை 264 ரன்கள் இன்னிங்ஸின் போது:

இலங்கைக்கு எதிராக உலகச் சாதனை 264 ரன்களை ரோஹித் சர்மா எடுத்த போது, இந்த முறை கோலி 2வது ரன் வேண்டும் என்று அடம்பிடித்தார். அது மிஸ்பீல்டினால் ஏற்பட்ட முடிவு. ரோஹித் சர்மாவுக்கு மிஸ்பீல்டுக்கு ஓடக்கூடாது என்ற முடிவு இருந்திருக்கலாம், விளைவு கோலி ரன் அவுட்.

2013, பெங்களூரு:

ஆஸி.க்கு எதிரான இந்தப் போட்டியில் கோலியின் ரன் அழைப்புக்கு செவிசாய்க்க ரோஹித் மறுக்க கோலி ரன் எடுக்கும் முன்பே ரன் அவுட் ஆகி வெளியேறினார். கோலி பந்தை மிட் ஆனில் தட்டிவிட்டு விறுவிறுவென சிங்கிளுக்கு வந்தார், ரோஹித் கொஞ்சம் மேலே வந்து விட்டு நின்றார் கோலி ரன் அவுட். ரோஹித் சர்மா 209 ரன்கள் எடுத்தார்.

கிங்ஸ்டன், 2011:

சதம் அடிக்க அருகில் இருந்த விராட் கோலி 2வது ரன் உள்ளது என்று ஓடினார். டீப் ஸ்கொயர் லெக்கில் ராம் சர்வாணின் த்ரோ நேராக விக்கெட் கீப்பருக்கு வர கார்ல்டன் பாஹ் ஸ்டம்ப்பைப் பெயர்த்தார். கோலிதான் 2வது ரன்னுக்காக அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்ட் எலிசபெத் 2018: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு தொடரில் 5-வது போட்டியில் ரோஹித் சர்மா பந்தை பின் காலில் சென்று தடுத்தாட பந்து மிக அருகிலேயே விழுந்தது, பீல்டர்கள் அருகில் இல்லாத காரணத்தினால் கோலி சிங்கிள் எடுக்க முயன்றார், ரோஹித் சர்மா ஓடவில்லை கோலி ரன் அவுட், ரோஹித் சர்மா சதம் எடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x