Published : 15 Feb 2018 08:45 AM
Last Updated : 15 Feb 2018 08:45 AM

ஐபிஎல் 11-வது சீசன்: சிஎஸ்கே - மும்பை ஏப்.7ல் மோதல்

ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க ஆட்டம் மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. தொடக்க நாளான 7-ம் தேதி இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

60 லீக் போட்டிகளில் 12 ஆட்டங்கள் மாலை 4 மணிக்கும், 48 போட்டிகள் இரவு 8 மணிக்கும் நடைபெறுகின்றன. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 2-வது ஆட்டத்தில் ஏப்ரல் 10-ம் தேதி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 15-ம் தேதி இந்தூரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும், 20-ம் தேதி சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், 22-ம் தேதி ஹைதராபாத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், 25-ம் தேதி பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும், 28-ம் தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியையும், 30-ம் தேதி சேப்பாக்கத்தில் டெல்லி டேர்டேவில்ஸ் அணியையும், மே 3-ம் தேதி கொல்கத்தாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் சந்திக்கிறது.

இதைத் தொடர்ந்து மே 5-ம் தேதி மாலை 4 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும், 11-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், 13-ம் தேதி சேப்பாக்கத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், 18-ம் தேதி டெல்லியில் டெல்லி டேர்டேவில்ஸ் அணியையும், 20-ம் தேதி சேப்பாக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும் எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x