Published : 15 Jan 2018 07:00 PM
Last Updated : 15 Jan 2018 07:00 PM

கோலியைத் தட்டிக்கொடுத்த ரபாடா: ஹர்ஷா போக்ளே நெகிழ்ச்சி

செஞ்சூரியனில் இந்தியா எடுத்த 307 ரன்களில் 153 ரன்களை எடுத்த கேப்டன் விராட் கோலியை ரபாடாவும், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் என்ஜிடியும் பாராட்டியது குறித்து வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே நெகிழ்ச்சிப் பதிவிட்டுள்ளார்.

ஏனெனில் கோலி விளையாடும் போது ரபாடா உள்ளிட்டோர் மென்மையான சில வார்த்தைகளை கேலியாக அவரிடம் கூறியதைப் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் கோலியைப் பாராட்டியது குறித்து ஹர்ஷா போக்ளே தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“கிரிக்கெட் ஆட்டத்தில் பழைய மோஸ்தர் மரியாதை நிமித்தங்கள் இருக்கிறது. ரபாடா களத்தில் கிண்டல்களுக்குப் பிறகு கோலியின் கையை குலுக்கியதும் அவரைத் தட்டிக் கொடுத்ததும், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் என்ஜீடி தன் தொப்பியை அகற்றி விட்டு கோலியுடன் கைகுலுக்கியதையும் பார்ப்பதற்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x