Published : 12 Jan 2018 04:12 PM
Last Updated : 12 Jan 2018 04:12 PM

கடந்த 8 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் சதங்களுடன் அதிக சராசரி வைத்திருக்கும் மிடில் ஆர்டர் வீரர் சச்சின்

தென் ஆப்பிரிக்காவில் பொதுவாக கடந்த 8 ஆண்டுகளில் எந்த அணியின் டாப் ஆர்டர் (பேட்டிங்கில் 1-3 நிலை வீரர்கள்) வீரர்களும் பெரிய அளவில் சோபித்ததில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, மே.இ.தீவுகள் ஆகிய நாடுகளுக்கு எதிராக அவர்கள் மண்ணில் ஆடும்போது டாப் ஆர்டர் வரிசை ஆடியதை விட தென் ஆப்பிரிக்காவில் கடந்த 8 ஆண்டுகளில் மற்ற அணிகளின் டாப் ஆர்டர் குறைவாகவே ரன்கள் எடுத்துள்ளன.

அதாவது தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லும் எந்த அணியின் டாப் ஆர்டரும் அங்கு சொதப்பியே உள்ளன என்று தெரிவிக்கிறது புள்ளி விவரங்கள். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய மண்ணில் வருகை தரும் அணியின் டாப் ஆர்டர் வீரர்களின் சராசரி கடந்த 8 ஆண்டுகளில் 36.92.

இலங்கையில்தான் பெரும்பாலும் வருகை தரும் அணியின் டாப் ஆர்டர்கள் அதிக சராசரியினை வைத்துள்ளனர், அதாவது 38.50 சராசரியாகும். நியூசிலாந்தில் 36.12, இந்தியாவில் 34.20, இங்கிலாந்தில் 34.09, மே.இ.தீவுகளி 34.08 என்று முன் வரிசை வீரர்கள் சராசரியாக ரன்கள் எடுத்துள்ளனர். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் மட்டும் வருகை தரும் அணியின் டாப் ஆர்டர்களின் சராசரி 25.29 தான்.

அதாவது தென் ஆப்பிரிக்காவில் புதிய பந்தை ஆடுவது அவ்வளவு கடினம் என்று இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து தெரிகிறது. ஆனால் இதே காலக்கட்டத்தில் தென் ஆப்பிரிக்க டாப் ஆர்டர் வைத்திருக்கும் சராரசி 44.23. ஹஷிம் ஆம்லா தன் சொந்த மண்ணாக இருந்தாலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளின் மிகச்சிறந்த பந்து வீச்சுக்கு எதிராக முறையே 60. 65, 58 என்று சராசரி வைத்துள்ளார்.

முதல் 1-3 வீரர்கள் சொந்த மண், அயல் நாட்டு மண் ஆட்டங்களை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய டாப் ஆர்டர் உள்நாட்டில் சராசரி 49.02, வெளிநாட்டில் 34.20.

ஆஸ்திரேலியா உள்நாட்டில் 44.83, வெளிநாட்டில் 36.92. இங்கிலாந்து சொந்த மண்ணில் 39.15, வெளிநாட்டில் 34.09. நியூஸிலாந்து சொந்த மண்ணில் 38.71, வெளிநாட்டில் 36.12. இலங்கை உள்நாட்டில் 38.33 வெளிநாட்டில் 38.50.

மே.இ.தீவுகள் சொந்த மண்ணில் 25.09 வெளிநாட்டில் 34.08

ஜிம்பாப்வே உள்நாட்டில் 27.69 வெளிநாடுகளில் 40.34

பங்களாதேஷ் உள்நாட்டில் 34.66, வெளிநாட்டில் 52.65. ஆக மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, பங்களாதேஷ் டாப் ஆர்டர்கள் தங்கள் சொந்த மண்ணை விட அயல்நாடுகளில் சிறப்பாக தெரிகின்றனர்.

சச்சின் முதலிடம்:

நடுவரிசை வீரர்களில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த 8 ஆண்டுகளில் அதிக சராசரி வைத்திருப்பவர் சச்சின், அதாவது இந்தக் காலக்கட்டத்தில் சச்சின் 2 சதங்களுடன் 3 போட்டிகளில் 326 ரன்களை 81.50 என்ற சராசரியில் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

சச்சினுக்கு அடுத்தபடியாக ஸ்டீவ் ஸ்மித் ஒரு சதத்துடன் 73 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இலங்கையின் திலன் சமரவீரா 3 போட்டிகளில் 339 ரன்களுடன் 67.80 சராசரி 2 சதங்கள்.

பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், சாமுவேல்ஸ், விராட் கோலி ஆகியோரும் 1 சதத்துடன் தென் ஆப்பிரிக்காவில் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளனர். மைக்கேல் கிளார்க் 5 போட்டிகளில் 387 ரன்களை 2 சதங்களுடம் 48.37 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார்.

ஆதாரம்: ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்போ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x