Published : 05 Jan 2018 02:41 PM
Last Updated : 05 Jan 2018 02:41 PM

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்; 3 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர்

தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையேயான முதல் டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி ஆரம்ப விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்க தடுமாறி வருகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

தென்னாபிரிக்கா தலை நகர் கேப்டவுன்னில் இந்திய நேரப் படி 2 மணியளவில் முதல் டெஸ்ட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

 டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடர்ந்து மூன்று முன்னணி தென் ஆப்பிரிக்க பேஸ்ட்மன்கள், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமாரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

டீன் எல்கர் 0 ரன்னிலும், தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் ஹஷிம் ஆம்லா 3 ரன்னிலும், ஐடன் மார்க்ரம் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தற்போதைய நிலவரப் படி தென் ஆப்பிரிக்க அணி 8 ஓவர்கள் முடிவில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுபிளெஸ்ஸிஸ், ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோர் தற்போது களத்தில் உள்ளனர்.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், ஷிகர் தவண், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பார்த்திவ் படேல், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், மொகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.

தென் ஆப்பிரிக்கா: டுபிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, தெம்பா பவுமா, குயிண்டன் டி காக், தியூனிஸ் டி புருய்ன், ஏ.பி.டிவில்லியர்ஸ், டீன் எல்கர், கேஷவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், மோர்னே மோர்கெல், கிறிஸ் மோரிஸ், ஆண்டில் பெலுக்வயோ, பிலாண்டர், ரபாடா, டேல் ஸ்டெய்ன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x