Published : 30 Nov 2017 10:42 AM
Last Updated : 30 Nov 2017 10:42 AM

ஆஷஸ் தொடருக்கு ஸ்டோக்ஸ் வந்தால் வரவேற்போம்: இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் தகவல்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் ஆடவந்தால் இருகரம் நீட்டி வரவேற்போம் என்று இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் லண்டன் விமான நிலையத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் காத்திருக்கும் புகைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரில் பங்கேற்கச் செல்வதாக இங்கிலாந்தில் வதந்தி பரவியது. இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுத்தது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான கிறிஸ் வோக்ஸ் கூறும்போது, “ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரனாகவும், நல்ல நண்பனாகவும், பென் ஸ்டோக்ஸ் அணியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் அணியில் இணைந்தால், இரு கரம் நீட்டி வரவேற்போம். அவர் பிரச்சினைகளில் இருந்து மீண்டுவந்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x