Published : 07 Oct 2017 12:58 PM
Last Updated : 07 Oct 2017 12:58 PM

உத்வேகமும் அளிக்க முடியவில்லை, வழிகாட்டவும் முடியவில்லை: விரக்தியில் முஷ்பிகுர் ரஹிம்

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இதுகாறும் பாடுபட்டுச் சேர்த்து வைத்த பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் நிலையில் தன்னால் தன் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியவில்லை என்று வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் விரக்தியில் தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று எதிரணியை பேட் செய்ய அழைத்தது, தற்போது பேட் செய்ய அழைத்தது என்று தான் ஏன் டாஸ் வென்றோம் என்று இருப்பதாக பொறுமிய முஷ்பிகுர் ரஹிம் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் குவிப்பு குறித்துக் கூறும்போது,

“டாஸ் வென்றது என் தவறு, இந்த 2 போட்டிகளிலும் டாஸில் தோற்றிருக்கலாம். இது என்னுடைய சொந்தத் தோல்வியே, என்னால் வீரர்களுக்கு உத்வேகமூட்ட முடியவில்லை, வழிகாட்டியாக இருக்க முடியவில்லை.

நான் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன், நான் நல்ல பீல்டர் இல்லை. பயிற்சியாளர்கள் என்னை டீப்பில் பீல்ட் செய்யுமாறு கூறுகின்றனர். காரணம், அருகில் பீல்ட் செய்தால் நான் பந்தைக் கோட்டை விடுவதாகவும் கேட்ச்களை நழுவ விடுவதாகவும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால் உள்ளே நின்றால்தானே பவுலர்களிடம் பேச முடியும், ஆனால் அணி நிர்வாகம் என்ன சொல்கிற்தோ அதைக் கேட்க வேண்டியுள்ளது.

இந்தப் பிட்ச் முதல் 2 மணி நேரங்களுக்கு நன்றாகவே இருந்தது, நிறைய ரன்களைக் கொடுத்தோம். இதே பிட்சில் அவர்கள் எப்படி வீசுவார்கள் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. சிறிது நேரங்களில் நன்றாக வீசினர், ஆனால் அதனை நீடித்துச் செய்ய முடியவில்லை. ஃபுல் லெந்தில் வீசி ஸ்விங் செய்யலாம் என்றால் நேராக அடிக்கிறார்கள், சரி கொஞ்சம் லெந்தை மட்டுப்படுத்தலாம் என்றால் ஒரேயடியாக ஷார்ட் பிட்ச் ஆகி விடுகிறது” என்றார் முஷ்பிகுர் ரஹிம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x