Published : 16 Sep 2017 10:24 AM
Last Updated : 16 Sep 2017 10:24 AM

மே.இ.தீவுகள் டி 20ல் மோதல்

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது. டெஸ்ட் போட்டி தொடரை தொடர்ந்து இரு அணிகளும் ஒரு டி 20 ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன.

இதில் டி 20 ஆட்டம் செஸ்டர் லீ ஸ்ட்ரிட்டில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது. கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் களமிறங்குவதால் இந்த ஆட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. அதேவேளையில் வெற்றி ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இங்கிலாந்து களமிறங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x