Last Updated : 16 Sep, 2017 10:20 AM

 

Published : 16 Sep 2017 10:20 AM
Last Updated : 16 Sep 2017 10:20 AM

ஆரோன் பின்ச் காயமடைந்துள்ளதால் ஆஸ்திரேலிய அணியில் ஹேண்ட்ஸ்கம்ப் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி வீரரான ஆரோன் பின்ச் காயமடைந்துள்ளதால் மாற்று வீரராக பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அதிரடி வீரரான ஆரோன் பின்ச் -க்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் ஆரம்ப கட்ட ஆட்டங்களில் ஆரோன் பின்ச் - க்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது இடத்தை நிரப்பும் வகையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் தாயகம் திரும்பிய ஹேண்ட்ஸ்கம்ப் உடடினயாக ஆஸ்திரேலிய அணியினருடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x