Published : 17 Aug 2017 10:06 AM
Last Updated : 17 Aug 2017 10:06 AM

15 பந்துகளில் அரை சதம் விளாசிய வாஷிங்டன் சுந்தர்

டிஎன்பிஎல் தொடரின் 2-வது சீசன் இறுதிப் போட்டிக்கு தூத்துக்குடி ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி முன்னேறியது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது. தொடக்க வீரரான வாஷிங்டன் சுந்தர் 15 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 114 ரன்களுக்கு சுருண்டது. தொடக்க வீரர்களான கோபிநாத் 1, தலைவன் சற்குணம் 11ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினர். 13 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில் களமிறங்கிய சத்யமூர்த்தி சரவணன் 7 ரன்களில் நடையை கட்டினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய எஸ்.கார்த்திக் 33 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய உதிரசாமி சசிதேவ் 2, கேப்டன் ஆர்.சதீஷ் 2 ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாட முயன்ற அந்தோனி தாஸ் 17 பந்துகளில், 27 ரன்கள் எடுத்து டேவிட்சன் பந்தில் வெளியேறினார்.

தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ் அணியில் அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 115 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் விளையாடிய தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 12.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

தொடக்க வீரரான வாஷிங்டன் சுந்தர் 15 பந்துகளில் அரை சதம் விளாசினார். டிஎன்பிஎல் தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக அரை சதமாக இது அமைந்தது. வாஷிங்டன் சுந்தர் 36 பந்துகளில், 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 73 ரன்களும், முகுந்த் 27 பந்துகளில் 33 ரன்களும் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கௌசிக் காந்தி 9 ரன், தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x