Published : 24 Nov 2015 10:07 AM
Last Updated : 24 Nov 2015 10:07 AM

3வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்: நாக்பூர் ஆடுகளமும் சுழலுக்கு சாதகமாக அமைகிறது- தாக்குப்பிடிக்குமா தென் ஆப்பிரிக்க அணி

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் நாக்பூரில் நாளை தொடங் குகிறது. இதற்கிடையே இந்த போட்டிக்கான ஆடுகளமும் சுழற் பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும் என தகவல்கள் வெளி யாகி உள்ளது.

3வது டெஸ்ட்

இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொட ரில் தென் ஆப்பிரிக்க அணி 0-1 என பின்தங்கியுள்ளது. மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 108 ரன்கள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட்டில் 4 நாள் ஆட்டம் மழை யால் கைவிடப்பட்டதால் டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் 3வது டெஸ்ட் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

ஒருநாள் போட்டி, டி 20 தொடர்களில் அதிரடி பேட்டிங்கால் மிரட்டிய தென் ஆப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் திணறி வருகிறது. அந்த அணி இரு டெஸ்டிலும் சேர்த்து மொத்தம் 166.5 ஓவர்களையே களத்தில் சந்தித்துள்ளது. ஒரு இன்னிங்ஸில் கூட தென் ஆப்பிரிக்க அணி 70 ஓவர்களை தாண்ட வில்லை.

சுழலுக்கு சாதகம்

இந்நிலையில் நாக்பூர் ஆடுக ளமும் சுழற்பந்து வீச்சுக்கே சாதக மாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இததொடர்பாக ஆடுகள வடிவ மைப்பாளர் அமர் ஹர்லேகர் கூறும் போது, நிச்சயம் ஆடுகளத்தில் பந்துகள் திரும்பும். இந்த தொட ரில் அமைக்கப்பட்டு வரும் ஆடுகளங்களில் இருந்து இந்த மைதானம் வித்தியாசமாக இருக்காது. இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும் என்றார்.

3வது டெஸ்ட் போட்டிக்கு மைதானத்தின் நடுவே உள்ள ஆடுகளம் பயன்படுத்தப்பட உள் ளது. இந்த ஆடுகளம் கடந்த மாதம் ரஞ்சி கோப்பை போட்டியின் போது சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. அஸாம் அணிக்கு எதிரான ஆட் டத்தில் விதர்பா சுழற்பந்து வீச்சாளர்கள் 16 விக்கெட்கள் வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடி கொடுத் துள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் களுக்கு சாதகமாக அமைக்கப் பட்டுள்ள இந்த மைதானம் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கும் ஒத்துழைக்கும் என கூறப்படுகிறது.

மாற்றம் இருக்குமா?

இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு நாக்பூர் ஆடுகளமும் சோதனை களமாகவே இருக்கும். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கே கைகொடுக்க வாய்ப்புள்ளதால் இந்திய அணியில் எந்தவித மாற் றங்களும் இருக்காது என தெரி கிறது. 2 சுழற்பந்து வீச்சாளர், 2 வேகப்பந்து வீச்சாளர், ஒரு மித வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங் கக்கூடும். பேட்டிங்கில் ஷிகர் தவண் பார்மிற்கு வந்திருப்பது பலம் சேர்க்கிறது. முரளி விஜய், புஜாரா ஆகியோருடன் கோலி, ரஹானேவும் நம்பிக்கையுடன் ஆடி ரன் சேர்க்கும் பட்சத்தில் சிறப்பான ஸ்கோரை சேர்க்கலாம்.

தென் ஆப்பிரிக்க அணியில் மும் மூர்த்திகளாக விளங்கும் ஆம்லா, டுபிளெஸ்ஸி, டி வில்லியர்ஸ் ஆகியோர் கடந்த காலங்களில் அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றியுள்ளனர். இவர்களில் தற்போது இந்திய டெஸ்ட் தொடரில் டி வில்லியர்ஸ் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வீரராக உள்ளார். தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கில் எழுச்சி பெறுவது என்பது ஆம்லா, டுபிளெஸ்ஸி கையில் தான் உள்ளது.

ஸ்டெயின்

இந்திய சுழல் ஆடுகளங்களில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச் சாளர்களால் டெஸ்டில் பிரகாசிக்க முடியவில்லை. ஸ்டெயின் முழு உடல் தகுதியை இன்னும் எட்ட வில்லை. நேற்றைய பயிற்சியின் போது அவர் ஒரு சில ஓவர்கள் பந்து வீசினார். எனினும் போட்டி தொடங்குவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பே ஸ்டெ யினின் உடல் தகுதி இறுதி நில வரம் தெரிய வரும்.

தென் ஆப்பிரிக்க அணி கடைசி யாக 2010ல் நாக்பூரில் இந்தியா வுக்கு எதிராக டெஸ்டில் விளையாடி யது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற் றிருந்தது. 4 நாட்களில் முடிவடைந்த இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 558 ரன்கள் குவித்தது. ஆம்லா 253 ரன் விளாசினார். ஸ்டெயின் தனது ரிவர்ஸ் ஸ்விங்கால் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டும் 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டும் சாய்த் தார்.

வேகம் எடுபடுமா?

இந்தியாவில் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுக ளங்களில் ஒன்றாக நாக்பூர் ஆடு களம் அப்போது இருந்ததால் தென் ஆப்பிரிக்க வீரர்களால் சாதிக்க முடிந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. இதுதொடர்பாக அமர் ஹர்லேகர் கூறும்போது, "கடந்த முறை வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது போன்று தற்போது செயல்பட வாய்ப்புகள் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளம் வித்தியாசமாகவே இருக்கும்" என்றார்.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான அஸ் வின், ஜடேஜா ஆகியோர் தலா 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இந்த சுழல் கூட்டணி நாக்பூர் டெஸ்டிலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x