Published : 23 Oct 2016 12:38 PM
Last Updated : 23 Oct 2016 12:38 PM

3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து இன்று மோதல்

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது.

தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு டெல்லி பெரோஷா கோட்லாவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து பதிலடி கொடுத்தது. 13 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் வெற்றிப் பெற்ற உற்சாகத்தில் இன்றைய ஆட்டத்தை நியூஸிலாந்து எதிர்கொள்கிறது. வெற்றியை தக்கவைத்துக்கொள்ள அந்த அணி மேலும் வலுவாக மோதக்கூடும். 2-வது ஒருநாள் போட்டியில் அந்த அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் கடைசிக் கட்டத் தில் சரியான திசையில் பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்தனர்.

அதிலும் டிரென்ட் போல்ட் அசத்தினார். பேட்ஸ்மேன்கள் குறிப்பிட்ட திசைகளில் மட்டுமே பந்தை அடிக்கும் விதத்தில் பந்துகளை வீசி அந்த இடங்களில் கூடுதல் பீல்டர்களையும் நிறுத்தி ஒன்று, இரண்டு ரன்கள் செல்வதை கூட சீராக கட்டுப்படுத்தி அசத்தினார் கேப்டன் வில்லியம்சன்.

எந்த ஒரு கட்டத்திலும் சரியான திசையில் பந்துகளை வீசி இந்திய பேட்ஸ்மேன்களை அதிக டாட் பந்துகளை எதிர்கொள்ள செய்து விட்டால் எளிதில் நெருக்கடியை ஏற்படுத்திவிடலாம் என்ற வியூகத்தை கடந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி கையாண்டது.

அதே தந்திரத்தை இன்றைய ஆட்டத்தில் அந்த அணி செயல் படுத்த முயற்சிக்கும். வில்லியம்சன், டாம் லதாம் ஆகியோர் மட்டுமே இந்தச் சுற்றுப்பயணத்தில் சீராக ரன் சேர்த்து வருகின்றனர். இவர்கள் நிலைத்து ஆடுவதுதான் பேட்டிங்கில் அணிக்கு பலம் சேர்க்கிறது.

கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த வில்லியம்சன் இன்றும் சிறப்பான ஆட்டத்தை தொடரக்கூடும். மார்ட் டின் குப்தில், ராஸ் டெய்லர், லூக் ரான்ஜி ஆகியோரும் பேட்டிங் கில் கைகொடுத்தால் இந்திய அணிக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்கலாம்

2-வது ஒருநாள் போட்டியில் இருந்து தோனி தலைமையிலான இந்திய அணி பாடம் கற்றுக் கொண்டிருக்கக்கூடும். ஆட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றால் வலுவான பார்ட்னர் ஷிப்பை கட்டமைக்க வேண்டும் என்பதை உணர்ந்து இந்திய வீரர்கள் இன்று செயல்படக்கூடும்.

இன்றைய ஆட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இரு ஆட்டங்களிலும் கிடைத்த வாய்ப்பை மணீஷ் பாண்டே பயன்படுத்த தவறினார். அதனால் அவர் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுரேஷ் ரெய்னா இன்னும் முழு உடல் தகுதியை பெறவில்லை என்பதால் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்க வாய்ப்பில்லை என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கேதார் ஜாதவ் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் கை கொடுப்பவராக உள்ளார்.

தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே ஜோடி இரு ஆட்டங்களிலும் சொல்லும்படி யான வகையில் சிறப்பான தொடக்கம் கொடுக்கவில்லை. இருவரும் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பட்சத்தில் அடுத்து வரும் வீரர்கள் அதை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

விராட் கோலி கடந்த ஆட்டத் தில் லெக் ஸ்டெம்புகளுக்கு வெளியே விலகிச் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு விக் கெட்டை பறிகொடுத்தார். இன் றையப் போட்டி நடைபெறும் மொகாலி மைதானத்தில் கடந்த மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி 51 பந்தில் 82 ரன்கள் விளாசி அரை இறுதிக்கு முன்னேற உதவிப் புரிந்தார்.

இதே மைதானத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 139 ரன்கள் விளாசியிருந் தார். அதன் பின்னர் தோனி இதுவரை சதம் அடிக்கவில்லை. அவரது கேப்டன் பதவி நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில் தோனி மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியக் கட்டாயத்தில் உள்ளார்.

பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா கூட்டணி வலுவாக உள்ளது. கடைசிக் கட்டத்தில் பும்ரா தனது யார்க்கர்களால் பலம் சேர்த்து வருகிறார். இதேபோல் அமித் மிஸ்ரா, அக் ஷர் படேல் சுழல் கூட்டணியும் ரன்குவிப்பை கட்டுப்படுத்துகிறது.

வளர்ந்து வரும் ஆல்ரவுண்ட ரான ஹர்திக் பாண்டியா கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கின் போது கடைசிக் கட்டத்தில் நெருக்கடியை சரியாக கையாண்ட போதிலும் சாதாரண ஷாட்களை மேற்கொண்டே ரன் சேர்த்தார். இதன் விளைவு அணிக்கு எதிராகவே அமைந்தது. வரும் ஆட்டங்களில் பாண்டியா இதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். இன்றைய ஆட்டத்தில் வெற்றிப் பெற்று தொடரில் முன்னிலை வகிக்க இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

நேரம்: பிற்பகல் 1.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x