Last Updated : 26 Dec, 2016 10:26 AM

 

Published : 26 Dec 2016 10:26 AM
Last Updated : 26 Dec 2016 10:26 AM

2-வது டெஸ்ட் போட்டி: ஆஸியை பழிதீர்க்க பாகிஸ்தான் தீவிரம்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்க்க பாகிஸ்தான் அணி தீவிரமாக உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் இப்போட்டியின் 2-வது இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக ஆடி 450 ரன்களைக் குவித்தது, பாகிஸ் தான் அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை சந்தித்த பாகிஸ்தான், 2-வது டெஸ்ட்டில் அதற்கு பழிதீர்க்கும் எண்ணத்துடன் களத்தில் இறங்குகிறது.

இந்த போட்டி குறித்து நிருபர் களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தா னின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், “முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் களின் தன்னம்பிக்கை அதிகரித்துள் ளது. மெல்போர்ன் போட்டியில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் களுக்கு அவர்கள் கடும் சவாலாக விளங்குவார்கள்” என்றார்.

மிஸ்பா உல் ஹக், ஆசாத் ஷபிக், அசார் அலி, யூனிஸ் கான், சர்பிராஸ் அகமது என்ற வலிமையான பேட் டிங் வரிசையை கொண்டிருப்பது பாகிஸ்தானின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும், ஸ்டார்க் - ஹசல்வுட்டின் பந்துவீச்சு கூட்டணி அதைச் சிதறடிக்கும் என்று ஆஸ்திரேலியா தைரியமாக உள்ளது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அந்த அணி ஆஸ்தி ரேலிய மண்ணில் கடந்த 10 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்றுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் அந்த அணி கடைசியாக கடந்த 1981-ம் ஆண்டுதான் வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு இந்த மைதானத்தில் வெற்றி பெற்றதில்லை. இந்நிலை யில் இந்த டெஸ்ட் போட்டியில் வென்று ஆஸ்திரேலியாவில் மீண் டும் வெற்றிக்கணக்கை தொடங்க பாகிஸ்தான் அணி ஆர்வமாக உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டி குறித்து நேற்று நிருபர்களிடம் கூறிய பாகிஸ் தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், “பாகிஸ்தான் அணியின் பந்துவீச் சாளர்கள் கடந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதை சரிசெய்ய இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளரான சோகைல் கான் அணியில் சேர்க்கப்படுவார். அணியின் பந்துவீச்சை அவரது வருகை பலப்படுத்தும் என்று நம்பு கிறேன். பந்துவீச்சாளர்கள் மட்டு மின்றி பேட்ஸ்மேன்களுக்கும் இந்த தொடர் சவாலாக இருக்கும். முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இந்த டெஸ்ட் போட்டியை எதிர்கொள் கிறோம். இப்போட்டிக்காக நாங்கள் கடுமையாக பயிற்சி செய்துள்ளோம்” என்றார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் 2-வது டெஸ்ட் போட்டியை சந்திக்கவுள்ளோம். ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருப் பதால், அது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக் கிறேன். டாஸில் வெற்றிபெற்றால் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்கும்” என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x