Published : 16 Jul 2015 09:55 AM
Last Updated : 16 Jul 2015 09:55 AM

2-வது ஆஷஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் 169 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட ஆஸ்திரேலியா, இந்தப் போட்டியில் வெற்றி கண்டு தோல்வி யிலிருந்து மீள வேண்டிய நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்கு கிறது. ஆனால் இங்கிலாந்து அணியோ முதல் போட்டியில் வெற்றி கண்டிருப்பதால் இந்தப் போட்டியில் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்குகிறது.

பிராட் ஹேடின் விலகல்

ஆஸ்திரேலிய அணியில் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் தனிப்பட்ட காரணங்களுக்காக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 37 வயதான ஹேடின் 2-வது போட்டியில் இருந்து விலகியிருந்தாலும், ஆஸ்திரேலிய அணியினருடன்தான் இருக்கிறார்.

அவர் இதுபோன்று விலகுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் 2012-ல் மேற்கிந்தியத் தீவு களுக்கு எதிரான தொடரிலிருந்து விலகிய அவர், அடுத்த 6 மாதங்கள் கிரிக்கெட்டுக்கு திரும்பவில்லை. தனது மகள் மியாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்போது விலகினார். எனினும் 2012-13 சீசனில் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ஹேடின், 2012-2013 ஆஷஸ் தொடரில் இடம்பிடித்ததோடு, ஆஸ்திரேலிய அணியின் வெற்றியிலும் முக்கியப் பங்காற்றினார்.

இன்றைய போட்டியில் ஹேடி னுக்குப் பதிலாக அறிமுக விக்கெட் கீப்பராக களமிறங்குகிறார் பீட்டர் நெவில். லார்ட்ஸ் மைதானத்தில் பந்து எப்படி வரும் என்பதை கணித்து விக்கெட் கீப்பிங் செய்து மிகவும் கடினமாகும். அதனால் முதல் போட்டியிலேயே பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளார் பீட்டர் நெவில்.

வாட்சன் நீக்கம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சனை இந்தப் போட்டியி லிருந்து நீக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. அவருக்குப் பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் களமிறங்குகிறார்.

தொடர்ந்து சொதப்பி வரும் வாட்சன், 2013 டிசம்பருக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதமடிக்க வில்லை. கார்டிஃப்பில் நடந்த கடந்த டெஸ்ட் போட்டியில் தடுமாறிய அவர் இரு இன்னிங்ஸ்களிலும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமி ழந்தார். இதுதவிர பந்துவீச்சிலும் அவரால் பெரிய அளவில் தாக் கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் மார்ஷ், இதற்கு முன்னர் வாட்சன் இல்லாதபோதுதான் அணியில் இடம்பெற்றார். இப்போது முதல்முறையாக தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார்.

சிறப்பான தொடக்கம்

ஆஸ்திரேலிய அணி வலுவான ஸ்கோரை குவிக்க வேண்டுமெனில் தொடக்க வீரர்கள் கிறிஸ் ரோஜர்ஸ், வார்னர் சிறப்பாக ஆடுவது முக்கியம். கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரோஜர்ஸ் 95 ரன்கள் எடுத்தார். 2-வது இன்னிங்ஸில் வார்னர் 52 ரன்கள் எடுத்தார். மற்றபடி எந்த வீரரும் அரை சதத்தைக்கூட எட்டவில்லை. எனவே ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஸ்டீவன் ஸ்மித், கேப்டன் கிளார்க், ஆடம் வோஜஸ் ஆகியோர் சிறப்பாக ஆடுவது அவசியம்.

பந்துவீச்சைப் பொறுத் தவரையில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்தாலும் இன்றைய ஆட்டத்தில் விளையாட தகுதிபெற்றுவிடுவார் என தெரிகிறது. ஹேஸில்வுட், ஜான்சன் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் நாதன் லயனை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.

மொயீன் அலி சந்தேகம்

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் ஆல்ரவுண்டர் மொயீன் அலிக்கு விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் விளையாடுவது சந்தேகமே. கடந்த ஆட்டத்தில் 92 ரன்கள் எடுத்ததோடு, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மொயீன் அலி காயத் தால் பாதிக்கப்பட்டிருப்பது இங்கி லாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தி யுள்ளது. அவர் விளையாடாதபட் சத்தில் ரஷித் அடீல் சேர்க்கப்படு வார். மற்றபடி அந்த அணியில் எந்த மாற்றமும் இருக்காது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் கேப்டன் குக், ஆடம் லித், ஜோ ரூட், இயான் பெல், கேரி பேலன்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க் உட் கூட்டணியை நம்பியுள்ளது இங்கிலாந்து.

மைதானம் எப்படி?

கிரிக்கெட்டின் மெக்கா என்ற ழைக்கப்படும் லார்ட்ஸ் மைதா னத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஆஸ்தி ரேலியா 14 முறையும், இங்கிலாந்து 7 முறையும் வெற்றி கண்டுள்ளன. 14 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

போட்டி நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x