Last Updated : 07 Jul, 2016 09:50 AM

 

Published : 07 Jul 2016 09:50 AM
Last Updated : 07 Jul 2016 09:50 AM

2-வது அரையிறுதியில் இன்று மோதல்: ஜெர்மனியை பழிதீர்க்குமா பிரான்ஸ்?

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் மார்செலி நகரில் நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. உலக சாம்பியன் அணியும் யூரோ தொடரில் இருமுறை பட்டம் வென்ற அணியும் மோதும் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் அணியில் கிரிஸ்மான், ஆலிவியர் கிரவுடு, டிமிட்ரி பயேட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். கிரிஸ்மான் 4 கோல்கள் அடித்து இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பயேட், கிரவுடு ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளனர்.

காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் இத்தாலியை பந்தாடிய ஜெர்மனி அணியும் இன்றைய ஆட்டத்தை அதிக நம்பிக்கையுடன் சந்திக்கிறது. ஜெர்மனி அணியின் முன்கள வீரர் தாமஸ் முல்லர் கூறும்போது, “எங்களை பொறுத்தவரை எந்த அச்சமும் இல்லை. பிரான்ஸ் அணி தனிப்பட்ட முறையில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்களை கொண்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.

போட்டியை நடத்தும் அவர் களுக்குதான் நெருக்கடி உள்ளது. சில வீரர்கள் காயமடைந்தாலும் எங்கள் அணியின் தரம் குறையா மல்தான் உள்ளது” என்றார்.

தடை, காயம் காரணமாக ஜெர்மனி அணியின் நடுகள வீரர் ஹம்மெல்ஸ், ஸ்டிரைக்கர் மரியோ கோம்ஸ், நடுகள வீரர் ஷமி ஹெதிரா ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோம்ஸ் களமிறங்காததால் அவரது இடத்தில் மரியோ கோட்ஸி விளையாடக்கூடும். ஹம்மெல் ஸூக்கு பதிலாக முஸ்டாபி அல்லது பெனிடிக்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது.

ஜெர்மனிக்கு எதிரான கடைசி 3 ஆட்டங்களிலும் பிரான்ஸ் ஸ்டிரைக்கர் ஆலிவியர் கிரவுடு கோல் அடித்துள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்திலும் அவர் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்.

பிரான்ஸ் அணியில் தடை காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத தடுப்பாட்ட வீரர் அடில் ராமி, நடுகள வீரர் கோலோ ஹன்டி ஆகியோர் இன்று களமிறக்கப்படக்கூடும்.

பிரான்ஸ் அணி கடந்த 2014 உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத் திலும், 1982 உலகக் கோப்பை அரையிறுதியிலும் ஜெர்மனியிடம் தோல்வியடைந்திருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் பிரான்ஸ் வீரர்கள் உள்ளனர்.

பிரான்ஸ் நட்சத்திர வீரர் ஆலிவியர் கிரவுடு கூறும்போது, “பிரான்ஸ் கால்பந்து வரலாற்றில் மேலும் ஒரு அத்தியாயத்தை எழுத விரும்புகிறோம்” என்றார்.

பிரான்ஸ் அணி மோதிய கடைசி 9 ஆட்டங்களில் தோல் வியை சந்திக்கவில்லை. அதே வேளையில் ஜெர்மனி தனது கடைசி 6 ஆட்டங்களிலும் வெற் றியை தாரை வார்க்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x