Published : 25 May 2015 02:37 PM
Last Updated : 25 May 2015 02:37 PM

100 சதவீத திறன் மட்டத்தை எட்டவில்லை: தோல்வி குறித்து தோனி

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மும்பையிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

இந்தத் தோல்வி குறித்தும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் குறித்து சென்னை கேப்டன் தோனி கூறும் போது, “மும்பை அணி அதிக ரன்களை எடுத்துவிட்டது. முதல் ஓவர் நன்றாக அமைந்தது. 2-வது ஓவர் சரியல்ல, அங்கிருந்துதான் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.

பேட்ஸ்மென்களுக்கு பந்தை அடிக்க அதிக இடமும் நேரமும் கொடுக்காமல் இருந்தால் இது ஒரு நல்ல பிட்ச். சீரற்ற பவுன்ஸ் இல்லை. மைதானம் சிறியது, புறக்களம் பந்துகள் வேகமாக செல்லும் வகையில் அமைந்திருந்தது.

நாங்கள் அவர்களை (மும்பையை) 180 ரன்களுக்கு மட்டுப்படுத்தியிருந்தால் ஆட்டம் விறுவிறுப்பாகியிருக்கும். இது அணியாக திரண்டு விளையாடிய நல்ல முயற்சி. ஆனால் 100% திறன் மட்டத்தை நாங்கள் எட்டவில்லை.

மெக்கல்லம் இல்லாதது பெரிய பின்னடைவாகப் போய்விட்டது. ஆனால் இவையெல்லாம் ஆட்டத்தின் இன்றியமையாத அங்கம், இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.

ஒட்டுமொத்தமாக அணியின் ஆட்டத்திறன் சிறப்பாக இருந்தது. ஆனால் மீண்டும் ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது எப்படி என்பது பற்றி சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

மும்பை இண்டியன்ஸ் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் கூறும் போது, “மிகவும் திருப்திகரமான வெற்றி. இந்த இரண்டு மாதங்கள் மிகவும் சிறப்ப்பு வாய்ந்தது என்று நான் அணி வீரர்களிடத்தில் கூறினேன். அதுவும் சாம்பியன் பட்டமே வென்ற பிறகு இது நினைவில் நீண்ட நாட்களுக்கு நிற்கும்.

முதல் 6 போட்டிகளுக்குப் பிறகு அழுத்தம் ஏற்பட்டது. கைகளில் நகங்கள் எதுவும் மீதமில்லை. ஆனால் மீண்டும் எழுச்சியுற்றோம். அணியின் வளர்ச்சி, கேப்டனின் (ரோஹித் சர்மா) வளர்ச்சி, மிகவும் சிறப்பு வாய்ந்த்து. நாங்கள் இறுதிப் போட்டியில் இந்த ஐபிஎல் தொடரிலேயே சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக கருதுகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x