Published : 20 Apr 2016 09:32 AM
Last Updated : 20 Apr 2016 09:32 AM

வெற்றி தேடிக்கொடுத்த வார்னர்

ஐபிஎல் டி 20 தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. மார்ட்டின் கப்தில் 2, பார்த்தீவ் படேல் 10, ரோஹித் சர்மா 5, ஜோஸ் பட்லர் 11 ரன்கள் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

கிருனால் பாண்டியா கடைசி கட்டத்தில் 28 பந்தில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 49 ரன் விளாசியதால் கவுரவமான ஸ்கோரை எடுக்க முடிந்தது. 49 பந்தில் 54 ரன்கள் சேர்த்த அம்பாட்டி ராயுடுவின் மந்தமான ஆட்டமும் அணியின் ரன் குவிப்பு உயராததற்கு காரணமாக அமைந்தது.

143 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஐதராபாத் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற் றது. முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அணிக்கு இது முதல் வெற்றி யாகவும் அமைந்தது. கேப்டன் டேவிட் வார்னர் 59 பந்தில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 90 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். ஹெண்ட்ரிக்ஸ் 20, மோர்கன் 11, ஹூடா 17, ஷிகர் தவண் 2 ரன்கள் சேர்த்தனர். வார்னர் 17 ரன்னில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை ரோஹித் சர்மா ஒற்றைக் கையால் பாய்ந்து பிடிக்க முயன்றார். ஆனால் பந்து கையில் பட்டு நழுவியது.

49 ரன் சேர்த்த நிலையில் வார்னரை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பையும் மும்பை வீரர்கள் கோட்டை விட்டனர். இருமுறை தப்பிப்பிழைத்த வார்னர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி களத்தில் நிலைத்து நின்று ஆடி அணிக்கு வெற்றித்தேடிக்கொடுத்தார்.

ஐதராபாத் அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x