Published : 12 Feb 2016 10:14 AM
Last Updated : 12 Feb 2016 10:14 AM

விளையாட்டுத் துளிகள்: சென்னையில் ஏசியன் ரக்பி போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன் சார்பில் ஏசியன் ரக்பி செவன்ஸ் இரண்டாவது சீசன் போட்டிகள் சென்னையில் வரும் 20 மற்றும் 21ம் தேதிகள் நடைபெறுகிறது. இதில் ஆசிய நாடுகளை சேர்ந்த இந்தியா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, கஜகஸ்தான், சவுதி அரேபியா, சிரியா, குவாம், வங்கதேசம், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லெபனான், சீன தைபே அணிகள் கலந்துகொள்கின்றன.

மொத்தம் 12 ஆடவர் அணிகளும், 6 மகளிர் அணிகளும் பங்கேற்கின்றன. போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. போட்டிகளை காண அனுமதி இலவசம்.

-------------------------------------------

ஹாக்கியில் சென்னை அணிகள் வெற்றி

முதல்வர் கோப்பைக்கான சென்னை மண்டல அளவிலான ஹாக்கி போட்டியின் நாக் அவுட் சுற்று நேற்று தொடங்கியது. ஆடவர் பிரிவில் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் சென்னை அணி 15-0 என்ற கோல் கணக்கில் வேலூர் அணியையும், கிருஷ்ணகிரி 5-0 என்ற கணக்கில் திருவண்ணாமலையையும், திருவள்ளுர் 3-1 என்ற கணக்கில் கடலூர் அணியையும் தோற்கடித்தன.

விழுப்புரம் அணி கடைசி நேரத்தில் விலகியதால் காஞ்சிபுரம் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மகளிர் பிரிவில் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 16-0 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணகிரியையும், திருவண்ணாமலை 7-1 என்ற கோல் கணக்கில் காஞ்சிபுரம் அணியையும் வீழ்த்தின.

-------------------------------------------

டென்சிங் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி 2015ம் ஆண்டுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த விருதுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையத்தளமான >www.sdat.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை-84 என்ற முகவரியில் வரும் 29-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விருதுநகரில் நடைபெற்ற மாவட்டங்களுக்கிடையேயான ஜூனியர் ஹாக்கி போட்டியில் சென்னை அணி பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணியினருடன் அணி மேலாளார் லட்சுமி நாராயணன், பயிற்சியாளர் எட்வர்ட் தாமஸ் மற்றும் சென்னை மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் உதயகுமார், தமிழ்நாடு ஹாக்கி சங்க செயலாளர் ரேணுகா லட்சுமி ஆகியோர் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x