Published : 14 Feb 2016 01:15 PM
Last Updated : 14 Feb 2016 01:15 PM

விசாகப்பட்டிணத்தில் இன்று கடைசி டி 20 ஆட்டம்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

இலங்கைக்கு எதிரான இரண் டாவது டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் விசாகப் பட்டிணத்தில் இன்று கடைசி ஆட்டம் நடைபெறுகிறது.

மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் புனேவில் நடை பெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ராஞ்சியில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.

197 ரன்களை இலக்காக கொடுத்த இந்திய அணி 69 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற் றது. இந்நிலையில் டி 20 தொடரை வெல்வது யார் என்பதை தீர் மானிக்கும் கடைசி ஆட்டம் விசாகப்பட்டிணத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

பசுந்தரை ஆடுகளத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் ராஞ்சி போட்டியில் இந்திய வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டனர். பேட் டிங்கில் ஷிகர் தவண், ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பந்து வீச்சாளர்களும் ஆட் டத்தை தங்களது கட்டுப்பாட்டி லேயே வைத்திருந்த நிலையில், எந்த ஒரு தருணத்திலும் இலங்கை பேட்ஸ்மேன்களை சுதாரிக்க விடவில்லை. மேலும் பந்து வீச்சு, பேட்டிங்கில், கேப்டன் தோனி மேற்கொண்ட பரிட்சார்த்த முறைகளுக்கு நல்ல பலனும் கிடைத்தது.

ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து இந்திய வீரர்கள் செயல்பட்ட நிலையில் தங்களது திட்டங்களையும் சரியான முறை யில் செயல்படுத்தினர். ஷிகர் தவண்-ரோஹித் ஜோடி அதிர டியாக ஆடி நல்ல தொடக்கம் கொடுத்ததால் தான் இறங்க வேண்டிய இடத்தில் ஹர்திக் பாண்டியாவை தோனி களமிறக் கினார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 27 ரன் விளாசி மிரட்டி னார். அவரது ஷாட் தேர்வுகளும் சிறப்பானதாகவே இருந்தது.

இலங்கை அணியால் முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் போனது. ரஜிதா, துஸ்மந்தா ஷமீரா, ஷனகா ஆகியோரை கொண்ட இளம் வேகப்பந்து வீச்சு கூட்டணி புனே ஆட்டத்தில் இந்திய வீரர்களை திணறடித்தனர்.

ஆனால் ராஞ்சி போட்டியில் அனுபவம் வாய்ந்த இந்திய பேட்ஸ் மேன்கள் சுதாரித்து ஆடியதால் இந்த மூவர் கூட்டணி அதிக ரன்களை வாரி வழங்க வேண்டிய திருந்தது. கடைசி கட்டத்தில் பெரேரா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த் தினாலும் அது வெற்றிக்கு பலன ளிக்கவில்லை.

முன்னணி வீரர்கள் பலர் இந்த தொடரில் பங்கேற்காத நிலையில் மூத்த வீரரான தில்ஷானை நம்பியே பேட்டிங் உள்ளது. இன்று அவர் கைகொடுக்கும் பட்சத் தில் வலுவான ஸ்கோரை சேர்க்க லாம். போட்டி நடைபெறும் விசாகப் பட்டிணம் மைதானத்தில் காற்றின் ஈரப்பதம் காரணமாக பந்து நன்கு ஸ்விங் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜஸ்பிரிட் பும்ரா, அஸ்வின் நெருக்கடி தரக்கூடும்.

தொடர் 1-1 என சமநிலை வகிப் பதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆசியகோப்பை டி 20 தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இரு அணிகளுமே முயற்சிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x