Published : 22 Aug 2014 11:57 AM
Last Updated : 22 Aug 2014 11:57 AM

வங்கதேசத்தை வென்றது மே.இ.தீவுகள்

கிரனாடாவின் செயின்ட் ஜார்ஜ்ஸில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்.

முதலில் பேட் செய்த வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் அனாமுல் 138 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் டுவைன் பிராவோ 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

218 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணியில் கெயில் (3 ரன்கள்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன்பிறகு வந்த ராம்தின்-போலார்ட் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்க்க, மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியை நெருங்கியது. ராம்தின் 76 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 74 ரன்களும், போலார்ட் 70 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 89 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 39.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x