Last Updated : 30 Jul, 2016 03:11 PM

 

Published : 30 Jul 2016 03:11 PM
Last Updated : 30 Jul 2016 03:11 PM

ரியோ ஒலிம்பிக் கால்பந்து: பிரேசில் அணியின் கேப்டன் நெய்மர்

வரவிருக்கும் ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் பிரேசில் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரொஜீரோ மிகேல் அறிவித்தார். 2 ஆண்டுகளாக நெய்மர்தான் பிரேசில் அணியை தலைமைதாங்கி நடத்தி வருகிறார், ஆனாலும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அவரது பதவி பறிக்கப்படலாம் என்ற செய்திகள் உலவின.

ஆனால் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பிரேசில் பயிற்சியாளர் கூறும்போது, “கேப்டனாக நெய்மர் நீடிப்பார். அவரது தரநிலையைப் பொறுத்தவரை என்னுடைய எதிர்பார்ப்பையும் அவர் கடந்து விட்டார். ஆட்டத்தில் தனது திசையை விரைவில் மாற்றிக் கொள்பவர். தனிப்பட்ட வீரர் என்ற முறையில் இவரது ஆட்டமே அலாதியானது. குழுவில் அவர் அனைவராலும் நேசிக்கப்படுகிறார். விசாலமான இருதயம் படைத்த ஒரு நல்ல வீரர். இளம் வீரர்களிடத்தில் அன்பும் ஆதரவும் காட்டுபவர்” என்றார்.

நெய்மர் அடிக்கடி விருந்தில் கலந்து கொள்ளும் மற்றும் சில பிரபலங்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தானே சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது பற்றி அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் சமீபகாலஙக்ளில் அவரது ஆட்டம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதாலும அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 18 மாதங்களில் 5 முறை சிகப்பு அட்டைக் காண்பிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஜப்பானுக்கு எதிராக நட்பு ரீதியிலான பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது பிரேசில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x