Last Updated : 30 Jun, 2016 09:42 AM

 

Published : 30 Jun 2016 09:42 AM
Last Updated : 30 Jun 2016 09:42 AM

யூரோ கோப்பை முதல் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - போலந்து இன்று பலப்பரீட்சை: கைகொடுப்பாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ

15-வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ம் தேதி தொடங்கிய இந்த கால்பந்து திருவிழாவில் 24 நாடுகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்களின் முடிவில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, வேல்ஸ், இங்கிலாந்து, சுலோவேக் கியா, ஜெர்மனி, போலந்து, வடக்கு அயர்லாந்து, குரோஷியா, ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், அயர்லாந்து குடியரசு, ஹங்கேரி, ஐஸ்லாந்து, போர்ச்சுக்கல் ஆகிய 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

நாக் அவுட் சுற்றில் போட்டியை நடத்தும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, போர்ச்சுக்கல், வேல்ஸ், பெல்ஜியம், ஜஸ்லாந்து ஆகிய 8 நாடுகள் வெற்றி பெற்று காலிறுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஸ்பெயின், இங்கி லாந்து, குரோஷியா, சுவிட்சர் லாந்து, சுலோவேக்கியா, ஹங்கேரி, வடக்கு அயர்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகள் வெளியேற்றப் பட்டன.

2 நாள் ஓய்வுக்கு பிறகு காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதியில் போலந்து - போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.

போலந்து அணி 34 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் முதல்முறையாக காலிறு திக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி லீக் ஆட்டங்களில் 1-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தையும், 1-0 என்ற கணக்கில் உக்ரைனையும் வீழ்த் தியது. பலம் வாய்ந்த ஜெர்மனியுடன் கோல் ஏதுமின்றி டிரா செய்தி ருந்தது. நாக் அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. யூரோ வரலாற்றில் போலந்து அணி காலிறுதியை கடந்த தில்லை. இம்முறை அந்த அணி போர்ச்சுக்கலை வீழ்த்தி முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளது.

போலந்து அணியின் லீவான் டோவ்ஸ்கி, மிலிக், ஜாகூப், பிளாஸ்செவோவ்ஸ்கி ஆகியோர் நட்சத்திர வீரர்களாக உள்ளனர். இதில் பிளாஸ்செவோவ்ஸ்கி இந்த தொடரில் இரு கோல்கள் அடித்துள்ளார். லீவான்டோவ்ஸ்கி, சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்திருந் தார். இதனால் அவர் போர்ச்சுக் கலுக்கு எதிரான ஆட்டத்தில் கள மிறங்குவாரா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில் அந்த அணியின் துணை பயிற் சியாளர், லீவான் டோவ்ஸ்கி போர்ச்சுக்கலுக்கு எதிரான ஆட்டத்துக்கு தயாராகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

போர்ச்சுக்கல் அணி லீக் சுற்றில் 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி கூட பெறவில்லை. 1-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்துடனும், 0-0 என்ற கணக்கில் ஆஸ்திரியா வுடனும், 3-3 என்ற கணக்கில் ஹங்கேரியுடனும் டிரா செய்திருந் தது. நாக் அவுட் சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.

2004-ம் ஆண்டு யூரோ தொடரில் போர்ச்சுக்கல் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. இதுவே அந்த அணியின் சிறந்த செயல் பாடாக உள்ளது. இம்முறை கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால் டோவையே முழுமையாக அணி சார்ந்துள்ளது. அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ள அதேவேளையில் கூடுதல் திற மையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் ரொனால்டோ உள்ளார். இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இதில் போர்ச்சுக்கல் ஒரு முறையும், போலந்து ஒரு முறைவையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித் ததன் மூலம் 4 தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டா படைத் திருந்தார். யூரோ தொடர்களில் ரொனால்டோ இதுவரை 8 கோல்கள் அடித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் மேலும் ஒரு கோல் அடித்தால் அதிக கோல்கள் அடித்த பிரான்ஸ் கால்பந்து அணியின் ஜாம்பவான் மைக்கேல் பிளாட்டினியின் சாதனையை சமன் செய் வார். அவர் யூரோ தொடர் களில் 9 கோல்கள் அடித்து அதிக கோல் கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத் தில் உள்ளது குறிப் பிடத்தக்கது.

31 வயதான ரொனால்டோ தனது அணியை அரையிறு திக்கு அழைத்து செல் வதற்கு இன்றைய ஆட்டம் உதவக்கூடும். போர்ச்சுக்கல் வெற்றி பெறும் பட்சத்தில் அரை யிறுதியில் வேல்ஸ் அல்லது பெல் ஜியத்தை அந்த அணி எதிர் கொள்ளும்.

லீக் சுற்று முதல் ஆட்டத்தில் பலம் குறைந்த ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என டிரா செய்த போதும், ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற தவறவிட்ட போதும் ரொனால்டோ கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

ஆனால் ஹங்கேரி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ரொனால்டோ இரு கோல்கள் அடித்து அசத்தியதுடன் தனது அணியை நாக் அவுட் சுற்றுக்கும் தகுதி பெற செய்தார். எனினும் அவரது சிறந்த ஆட்டம் இந்த தொடரில் இன்னும் வெளிப்பட வில்லை. குரோஷியாவுக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் 117 நிமிடங்கள் களத்தில் இருந்த போதிலும் ரொனால்டோவால் கோல் அடிக்க முடியவில்லை. அந்த ஆட்டத்தில் ரிக்கார்டோ குயர்ஸ்மா கோல் அடித்ததாலேயே போர்ச்சுக்கல் காலிறுதி வாய்ப்பை பெற்றது. எனினும் இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் வழக்கமான 90 நிமிடங்களில் இலக்கை நோக்கி ஒரு ஷாட்டை கூட அடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. யூரோ கால்பந்து தொடரில் ஒரு அணி இதுபோன்று மோசமாக செயல்பட்டதும் இது தான் முதல்முறை என்றும் விமர்சிக்கப் பட்டது.

போர்ச்சுக்கல் பின்கள வீரர் ஜோஸ் போன்ட்டி கூறும்போது, ‘‘எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகின் சிறந்த வீரரான ரொனால்டோவுடன், நானி, குயர்ஸ்மா, ஜோவா மரியா ஆகியோரும் அணியில் உள்ளனர். குரோஷியாவுக்கு எதிராக நாங்கள் மோசமாக விளையாடினாலும் வெற்றி பெற்றோம். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெறவே விரும்புகிறோம். ஆனால் சில சமயங்களில் அது முடியாமல் போகிறது’’ என்றார்.

போலந்து கோல் கீப்பர் வோஜ்சீக் கூறும்போது, ‘‘குரோஷி யாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த வீரராக தேர்வான போர்ச்சுக்கலின் ரீனாட்டோ சான்சேஸ் தாக்கத்தை ஏற்படுத்தினார். போர்ச்சுக்கல் சிறந்த அணி. அந்த அணி ரொனால்டோவை மட்டும் நம்பி யில்லை. ரொனால்டோ தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என சிலர் கூறுகின்றனர். ஆனால் ரொனால்டோ போன்ற வீரர் ஒருவர் எனது அணியில் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புவேன். அவரை தவிர ரீனாட்டோவும் என்னை கவர்ந் துள்ளார். சந்தேகமே இல்லை காலிறுதியில் எங்களுக்கு பெரிய பணி இருக்கிறது’’ என்றார்.

இன்றைய ஆட்டம்

முதல் காலிறுதி

போர்ச்சுக்கல் - போலந்து

நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

தரவரிசை

போர்ச்சுக்கல் 8

போலந்து 27

நேருக்கு நேர்

3 ஆட்டத்தில் மோதியுள்ளன. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x