Published : 08 Mar 2017 06:04 PM
Last Updated : 08 Mar 2017 06:04 PM

‘மூளை மழுங்கிய’ செயலா? நேர்மையின்மையா?: ஸ்மித்துக்கு மைக்கேல் கிளார்க் கேள்வி

ஸ்மித் ஆட்டமிழந்த பிறகு டி.ஆர்.எஸ்.-க்காக பெவிலியன் உதவியை நாடியது பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது, கோலியின் குற்றச்சாட்டு இழிவானது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூற கோலிக்கு பிசிசிஐ-யும் கங்குலியும் ஆதரவு தர தற்போது மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய அணியின் நேர்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு மைக்கேல் கிளார்க் கூறும்போது, “வீடியோ பதிவைப் பார்க்கும் போது, எதிர்முனையில் இருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் பெவிலியன் நோக்கி செய்கை புரியுமாறு ஸ்மித்துக்கு அறிவுறுத்தியது தெரிகிறது. கோலி கூறியது போல் இது 3-வது முறையாக இல்லாமல் ஒரே முறைதான் என்றாலும் கூட இப்படிச் செய்திருக்கக் கூடாது என்பதே என் கருத்து.

ஸ்டீவ் ஸ்மித் ஆட்டத்தை மதிப்பவர் என்றால், அது ஒரே முறை நிகழ்ந்த தவறென்றால், மூளை மழுங்கிய செயல்பாடு என்பதை ஏற்கலாம்.

ஆனால் நான் இதில் மேலும் ஆதாரங்களைப் பார்க்க விரும்புகிறேன், விராட் கோலி கூறியது சரியெனில், ஆஸ்திரேலிய அணியினர் டி.ஆர்.எஸ். முறையை இப்படிப் பயன்படுத்துவது இது முழுக்க முழுக்க ஏற்க முடியாதது, இப்போது இது மூளை மழுங்கிய செயல் மட்டுமல்ல” என்றார்.

இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறும்போது, “ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள், துணைப் பயிற்சியாளர்களை ஸ்டாண்ட்ஸுக்கு அனுப்பி களத்தில் வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்த பணிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான் இப்படி கூற வேண்டியுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x