Last Updated : 29 Jun, 2016 07:36 PM

 

Published : 29 Jun 2016 07:36 PM
Last Updated : 29 Jun 2016 07:36 PM

முட்டாள் உலகில் வாழ்கிறாரா ரவி சாஸ்திரி? - சவுரவ் கங்குலி காட்டமான பதிலடி

தன்னைப் பயிற்சியாளராக தேர்வு செய்யாதது குறித்து கடும் ஏமாற்றமடைந்துள்ள ரவி சாஸ்திரி, ஆலோசனைக் குழுவில் உள்ள சவுரவ் கங்குலி தன் மீது மரியாதை குறைவாக இருந்ததாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்துள்ள கங்குலி, தன் மீது ரவி சாஸ்திரி வைப்பது தனிநபர் தாக்குதல் என்றார்.

அவர் இது பற்றி கூறியதாவது:

நான் மிகவும் வருந்துகிறேன், ஏமாற்றமடைகிறேன். அவர் (ரவி சாஸ்திரி) இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியுடன் பேசியிருக்கலாம். அவரது கருத்துகள் எல்லாம் தனிநபர் மீதான விமர்சனம்.

தலைமைப் பயிற்சியாளராக அவர் தேர்வு செய்யப்படாததற்கு நான் பொறுப்பு என்று அவர் நினைத்தாரென்றால் அவர் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் என்றே நான் கூற வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட குழுவில் அவரே 10 ஆண்டுகளாக இருந்திருக்கிறார் எனும்போது அவருக்கு தெரிந்திருக்கும் இதனால்தான் அவரது கருத்து ஏமாற்றமளிக்கிறது.

சாஸ்திரிக்கு நான் அறிவுரை ஒன்றை வழங்குகிறேன், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் போது, மிகவும் உயர்பதவிக்கான நேர்காணல் நடைபெறும் போது, அவர் நேரில் தனது நேர்காணலை அட்டெண்ட் செய்திருக்க வேண்டும். பாங்காக்கில் விடுமுறையைக் கழித்துக் கொண்டு கேமராவில் தனது நேர்காணலை செய்திருக்கக் கூடாது. குறிப்பாக இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் நேர்காணலில் இருந்தார் எனும்போது.

நான் அனில் கும்ப்ளேவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், உலகின் சிறந்த வீரர்களில் அவர் ஒருவர், கிரேட் கிரிக்கெட்டர்.

இவ்வாறு கூறினார் சவுரவ் கங்குலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x