Published : 10 Jan 2017 07:45 PM
Last Updated : 10 Jan 2017 07:45 PM

பயிற்சி ஆட்டத்தில் தோனி காலில் விழுந்த ரசிகர்

மும்பையில் நடைபெறும் இங்கிலாந்து லெவனுக்கு எதிரான இந்தியா ஏ அணியின் பயிற்சி ஒருநாள் ஆட்டத்தில் தோனி ஆடிக்கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் பிட்சிற்குள் ஓடி வந்து தோனியின் காலில் விழுந்தார்.

தோனி நீல உடையில் கேப்டனாக தனது கடைசி போட்டியில் ஆடுகிறார் என்று விளம்பரப்படுத்தப்பட்டதோடு, இன்று ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்பட்டது.

இந்நிலையில் 46 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்தியா ஏ அணி 258/4 என்று இருந்த போது தோனி 26 ரன்களில் ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென் மைதானக்களத்திற்குள் ரசிகர் ஒருவர் ஓடி வந்தார், அவர் தோனிக்கு அருகில் வந்த போது தோனி அவருக்கு கைகொடுக்கும் செய்கையாக கையை நீட்டினார். ஆனால் அவரோ சற்றும் எதிர்பாராத விதமாக தோனியின் காலில் விழுந்தார்.

பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x