Published : 23 Sep 2015 10:00 AM
Last Updated : 23 Sep 2015 10:00 AM

பயிற்சியை முடித்து தாயகம் திரும்பிய சென்னை அணிக்கு உற்சாக வரவேற்பு

இத்தாலியின் பெருஜியாவில் ஒரு மாத கால பயிற்சி முகாமை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய சென்னையின் எப்.சி. கால்பந்து அணிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையின் எப்.சி. அணியினர் அதிகாலையில் வந்தபோதும் வர வேற்புக்கு பஞ்சமில்லை. 150-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுத் தனர். சென்னையின் எப்.சி. அணி யின் கொடி, வீரர்களின் புகைப் படங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்திருந்த ரசிகர்கள், வீரர்களுக்கு மாலை அணிவித்தும், திலகமிட்டும் வரவேற்றதோடு, அவர்களுடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

பிரம்மாண்ட வரவேற்புக்குப் பிறகு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நட்சத்திர மிட்பீல்டரான இலானோ புளூமர் பேசுகையில், “இந்தத் தருணத்தில் எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இது மிகவும் வியப்பாக இருக்கிறது. களத்தில் சிறப்பாக ஆடுவதன் மூலம்தான் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல முடியும். ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதற்காக மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன்” என்றார்.

எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஸ்டிரைக்கரான ஃபிக்ரு டெஃபெரா கூறுகையில், “ரசிகர்களின் ஆதரவு மிக அற்புதம். நான் சென்னை அணிக்கு புதிய வீரர். ஆனால் என்னையும் சென்னை அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய ஒரு வீரரைப் போன்று நடத்தினார்கள். அவர்களின் ஆதரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். ரசிகர்களுக்காக நிறைய கோல் களை அடிக்க மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்” என்றார்.

இந்தியாவைச் சேர்ந்த மிட்பீல்ட ரான ஹர்மான்ஜோத் சிங் கப்ரா கூறுகையில், “மீண்டும் சென் னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. பிரம்மாண்ட வரவேற்பு அளித்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை ரசிகர்களுக்காக கோப் பையை வெல்ல விரும்புகிறோம்” என்றார்.

மேலும் ஒரு சில வீரர்களும், பயிற்சியாளர் மார்க்கோ மெட்டா ரஸியும் விரைவில் சென்னை வர வுள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

இத்தாலியில் ஒரு மாத காலம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சென்னையின் எப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்டானா அணியையும், 5-1 என்ற கோல் கணக் கில் சான் டொனாட்டா டவார் நெல்லே அணியையும், 2-0 என்ற கோல் கணக்கில் யூனிஒன் ஸ்போர்ட் டிவா அணியையும் தோற்கடித்தது. குவால்டோ அணியிடம் மட்டும் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x