Last Updated : 22 Oct, 2016 09:44 AM

 

Published : 22 Oct 2016 09:44 AM
Last Updated : 22 Oct 2016 09:44 AM

தோனியின் விக்கெட்தான் திருப்பம்: நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் கருத்து

இந்தியாவுக்கு எதிராக டெல்லி பெரோஷா கோட்லாவில் நடை பெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுகுறித்து அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறிய தாவது:

தோனியின் விக்கெட்டை சவுத்தி கைப்பற்றியதுதான் மிகப்பெரிய தருணமாக எங்களுக்கு அமைந்தது. தோனி போன்ற ஒருவரை அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதித்தால் நிச்சயம் போட்டியை முடித்து வைத்துவிடுவார். அவர் உலகின் சிறந்த வீரர். சவுத்தி செய்த கேட்ச்தான் வெற்றி பெற பெரிய வகையில் உதவியாக இருந்தது.

இதுபோன்ற ஆடுகளத்தில் நெருக்கடி கொடுக்க வேண்டுமென் றால் பந்து வீச்சாளர்கள் சரியான திசையில் வீச வேண்டும். பனிப் பொழிவு பிரச்சினை இருந்த நிலையிலும் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல் பட்டனர். கவர் திசையிலேயே பந்துகள் அதிகம் சென்றன. இதனால் கூடுதலாக பீல்டரை நிறுத்தி ரன் சேர்ப்பதில் தோனிக்கு நெருக்கடி கொடுத்தோம்.

பந்து ஈரமான நிலையிலும் அதிக பவுண்டரிகளை செல்ல விடவில்லை. அதிர்ஷ்டவசமாக சீரான இடைவேளையில் விக்கெட் களை கைப்பற்றிய நிலையில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன் படுத்த முடிந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்பட்ட விதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

டிரென்ட் போல்ட் மிகவும் புத்தி சாலித்தனமாகவும் துல்லியமாகவும் செயல்பட்டார். 10 ஓவர்களில் 25 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்துவது என்பது எப்போதும் நடைபெறாது. இது அவரது சிறந்த பந்து வீச்சாக அமைந்தது.

இந்த ஆடுகளத்தில் ரன் சேர்க்க கடினமாகவே இருந்தது. பந்து மெதுவாகவும், தாழ்வாகவும் வந்தன. ஆனால் ஆட்டத்தின் பாதி யில் மைதானம் கைகொடுத்தது. இந்தியாவில் எப்படி பந்து வீசவேண்டும் என நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம். டிரென்ட் போல்ட் தலைமையிலான வேகப் பந்து வீச்சாளர்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தினர். வெற்றி பெறு வதற்கு இதுதான் ஒரே வழி. வெற்றி பெற்ற அணியில் இருப்பது மகிழ்ச்சி யாக உள்ளது. அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் இருந்து அடுத்த ஆட்டத்தில் முன்னேற்றம் இருக்க வேண்டும். சிறந்த இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதால், இன்னும் சில துறைகளில் நாங்கள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டியதுள்ளது. இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x