Published : 08 Apr 2017 10:06 AM
Last Updated : 08 Apr 2017 10:06 AM

டெல்லி அணியுடன் இன்று மோதல்: வெற்றி முனைப்பில் பெங்களூரு

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னணி வீரர்களின் காயத்தால் பின்னடைவை சந்தித்துள்ள பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம் பியனான ஹைதராபாத்திடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.

208 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூ அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. ஐபிஎல் தொடரில் அந்த அணி 23 ஆட்டங்களுக்கு பிறகு அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது. இந்நிலையில் சொந்த மண்ணில் இன்று பெங்களூரு அணி முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கும். டி வில்லி யர்ஸ் முகுதுவலி காரணமாக அவதிப் பட்டு வருவதால் இந்த ஆட்டத் திலும் களமிறங்குவது சந்தேகம் தான். இதனால் வாட்சனே அணியை வழிநடத்துவார்.

கடந்த ஆட்டத்தில் கெய்ல், மன்தீப் சிங் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்த போதிலும் இன்னிங்ஸை மேற்கொண்டு கட்டமைக்க தவறினர். இதனால் இந்த ஜோடி இன்று நேர்த்தியாக விளையாட முயற்சிக்கும். பெங்களூரு ஆடுகளம் பேட்டிங் குக்கு சாதகமாக இருக்கும் என்ப தால் வாட்சன், கேதார் ஜாதவ் மிரட்டக்கூடும்.

பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் கடந்த ஆட்டத்தில் பெங்களூரு வீரர்கள் மோச மாக செயல் பட்டனர். ரூ.12 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டைமல் மில்ஸ் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திரா சாஹலும் எதிர் பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.

இவர்களை தவிர அனிகெட் சவுத்ரி, நாத் அர்விந்த் ஆகியோர் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தாரைவார்த்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஆடம் மில்னே அல்லது சாமுவேல் பத்ரி ஆகியோரில் ஒருவர் இடம்பெறக்கூடும்.

ஜாகீர்கான் தலைமையில் களமிறங் கும் டெல்லி டேர்டேவில்ஸ் அணி கடந்த 9 தொடர்களிலும் சொல்லும்படியான வகையில் சிறப்பான இடத்தை பெற வில்லை. முதற்கட்ட ஆட்டங்களில் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும்.

ஆனால் அது இம்முறை அவ்வளவு எளிதாக சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் முன்னணி வீரர்களான குயிண்டன் டி காக், டுமினி ஆகியோர் ஏற்கெனவே தொடரில் இருந்து விலகி உள்ளனர். இளம் அதிரடி வீரரான ஸ்ரேயஸ் ஐயர், சின்னம்மை பாதிப்பால் ஒரு வார காலம் விளையாட முடியாத நிலையில் உள்ளார்.

இவர்களை தவிர இலங்கையின் மேத்யூஸ், இந்தியாவின் முகமது ஷமி ஆகியோரும் முழு உடல் தகுதியுடன் இல்லை. ஜாகீர்கான் இந்த சீசனில் உள்ளூர் தொடரில் எதிலும் கலந்துகொள்ள வில்லை. இதனால் அவரது பந்து வீச்சு திறன் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. இளம் வீரரான ரிஷப் பந்த், மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி வீரர் கார்லோஸ் பிராத் வெயிட், நியூஸிலாந்தின் கோரே ஆண்டர்சன் ஆகியோரை நம்பியே பேட்டிங் உள்ளது. பந்து வீச்சில் ஆஸ்தி ரேலியாவின் பாட் கம்மின்ஸ், தமிழகத்தின் முருகன் அஸ்வின் வலுசேர்க்கக்கூடும்.

அணிகள் விவரம்

பெங்களூரு: ஷான் வாட்சன் (கேப்டன்), விராட் கோலி, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், நாத் அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், அனிகெட் சவுத்ரி, பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னே, பவன் நெகி, ஹர்ஷால் படேல், சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக்.

அணி: ஜாகீர்கான் (கேப்டன்), முகமது ஷமி, சபாஷ் நதீம், ஸ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, கார்லோஸ் பிராத் வெயிட், ஷமா மிலிந்த், கிறிஸ்மோரிஸ், கருண் நாயர், பிரதியுஸ் சிங், ரிஷப் பந்த், சேம் பில்லிங்ஸ், சஞ்சு சேம்சன், ஆதித்யா தாரே, சயத் ஹலீத் அகமது, கோரே ஆண்டர்சன், மேத்யூஸ், ரபாடா, முருகன் அஸ்வின், பாட் கம்மின்ஸ், நவ்தீப் ஷைனி, அங்கீத் பாவ்னே, ஷசாங்க் சிங்.

இடம் : பெங்களூரு

நேரம் : இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x