Last Updated : 19 Jul, 2016 09:45 AM

 

Published : 19 Jul 2016 09:45 AM
Last Updated : 19 Jul 2016 09:45 AM

ஜிகா வைரஸால் பயம் இல்லை; ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேனா என்று கணித்து கூற முடியாது: சானியா மிர்சா கருத்து

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேனா என்று என்னால் கணித்து கூற முடியாது என சானியா மிர்சா தெரிவித்தார்.

ரியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்குகிறது. இதில் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்தியாவுக்காக களமிறங்குகிறார். இரட்டையர் பிரிவில் பிரார்த்தனா தாம்ப்ரே உடனும், கலப்பு இரட்டையரில் ரோகன் போபண்ணாவுடனும் இணைந்து சானியா விளையாடு கிறார்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி தொடர்பாக சானியா மிர்சா கூறியதாவது:

பெரிய அளவிலான தொடருக்கு எந்த முறையில் தயார் ஆகுவேனோ, அதே போன்றுதான் ஒலிம்பிக் போட்டிக்கும் தயாராகி வருகிறேன். இங்கே அமர்ந்து கொண்டே ஒலிம்பிக்கில் என்ன நடைபெறும் என்று கணித்து கூற முடியாது.

ரோகன் போபண்ணாவுக் கும் எனக்கும் இடையேயான கெமஸ்டிரி சிறப்பாக உள்ளது. நாங்கள் இரு வரும் ஒருவரையொருவர் நீண்ட காலமாக நன்கு புரிந்து வைத்துள்ளோம். அதிக ஆட்டங்களில் நாங்கள் ஒன் றாக விளையாடி உள்ளோம். ஒலிம்பிக்கில் நாங்கள் இணைந்து விளையாடு வதை ஆவலுடன் எதிர்பார்த்துள் ளோம்.

ஒலிம்பிக் போட்டிக்கு சொந்த உத்வேகம் இருக்க வேண்டும், நீங்கள் அங்கு இருக்க வேண்டு மெனில் உங்கள் சொந்த உத்வேகம் இருக்க வேண்டும். பெரிய உத்வேகம் என்பது நாட்டுக்காக விளையாட உள்ளதை தவிர வேறு ஏதும் இருக்க முடியாது.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நான் கனடா போட்டியில் கலந்து கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டிக்கென்று சிறப்பு பயிற்சிகள் மேற்கொள்ளவில்லை. விம்பிள்டன், அமெரிக்க ஒபன் உள்ளிட்ட பெரிய அளவிலான தொடருக்கு எப்படி தயார் ஆகு வேனோ அதே போன்று தான் ஒலிம்பிக் போட்டிக்கும் பயிற்சி மேற்கொள்கிறேன். 3-வது முறை யாக ஒலிம்பிக்கில் பங்கேற்கிறேன். இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றார்.

ஜிகா வைரஸ் தாக்குதல் பயத் தால் டென்னிஸ் வீரர்கள் சிலர் ஒலிம் பிக்கில் இருந்து விலகி உள்ளனர். இதனால் ஜிகா வைரஸ் தொடர்பாக கவலை ஏதும் உள்ளதா என சானியாவிடம் கேட்ட போது, “ஒலிம்பிக் போட்டிக்காக ரியோ செல்கிறேன். எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதை நிச்சயம் செய்துகொள்வோம்” என்றார்.

சானியா மேலும் கூறும்போது, “ஒலிம்பிக் போட்டியை கண்டு பயமில்லையென பிரார்த்தனா தாம்ப்ரே சமீபத்தில் கூறியுள்ளார். இது சிறப்பானது தான். இளம் பெண்கள், இளம் குழந்தைகள் தற்போது அதிக அளவிலான தன்னம்பிக்கையுடன் உள்ளார் கள் என்றே நான் கருதுகிறேன்.

பயம் இல்லாமல் விளை யாடும் பட்சத்தில், பிரார்த் தனாவுக்கு ஒலிம்பிக் போட்டி மிகப்பெரிய ஆச்சரியமாக இருக் கும். ஆனால் நிச்சயம் ஒருவித பதற்றம் இருக்கும். பிரார்த் தனா என்னை சுற்றி நீண்ட காலம் இருந் துள்ளார். அந்த அனுபவம் அவ ருக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.

மார்ட்டினா ஹிங்கிஸூக்கு எதிராக இந்த ஆண்டில் இருமுறை மோதி உள்ளேன். அதனால் அந்த வித பிரச்சினையும் இல்லை. நாங்கள் ஒரு வொருக்கொருவர் எதிராக விளையாடுவது என்பது கடினமானதுதான். மீண் டும் நாங்கள் எதிர் எதிரே சந்திக்க நேரிட் டால் அது இறுதிப் போட்டியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x