Last Updated : 05 May, 2016 09:40 AM

 

Published : 05 May 2016 09:40 AM
Last Updated : 05 May 2016 09:40 AM

ஜாகிர் கானின் அறிவுரைப்படி இயல்பாக ஆடி ரன்களைக் குவித்தேன்: டெல்லி வீரர் பந்த் மகிழ்ச்சி

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஜாகிர் கானின் அறிவுரைப்படி இயல்பாக ஆடி ரன்களைக் குவித்தேன் என்று டெல்லியின் இளம் வீரர் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜ்காட்டில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணி யை டெல்லி டேர்டெவில்ஸ் எதிர் கொண்டது. இதில் முதலில் ஆடிய குஜராத் அணி, முன்னணி வீரர்க ளான ஸ்மித் (15 ரன்கள்), மெக் கல்லம் (1 ரன்), பின்ச் (5 ரன் கள்) ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது. இந்நிலை யில் தினேஷ் கார்த்திக்கும் (53 ரன்கள்), ஜடேஜாவும் (36 ரன்கள்) ஓரளவு நிலைத்து ஆடினர். இவர் களின் பொறுப்பான ஆட்டத்தால் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது.

இதைத்தொடர்ந்து ஆடவந்த டெல்லி அணியில் 18 வயதான இளம் வீரர் ரிஷப் பந்த், அசுரத்தனமாக ஆடி 40 பந்துகளில் 69 ரன்களைக் குவித்தார். இவரது ஸ்கோரில் 9 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். பந்த்துக்கு இணையாக ஆடிய டிகாக், 46 ரன்களை விளாச, குஜராத் அணி நிலைகுலைந்தது. டெல்லி அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களைக் குவித்து அபாரமாக வென்றது.

இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷப் பந்த், நிருபர்களிடம் கூறியதாவது:

டெல்லி அணியின் வெற்றிக்கு என்னால் இயன்ற பங்களிப்பை செய்யமுடிந்ததில் மகிழ்ச்சி அடை கிறேன். எங்கள் அணியின் பயிற்சி யாளர், கேப்டன் மற்றும் சக வீரர் கள் என் மீது மிகுந்த நம் பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன். இன்று பேட்டிங் செய்யச் செல்லும் முன் என்னிடம் பேசிய கேப்டன் ஜாகிர் கான், ‘எப்போ தெல்லாம் உனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அதை இரு கரங்களாலும் இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும். எந்தவித அழுத்தமும் இல்லாமல் உன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’ என்றார். நானும் அவர் கூறியபடி என் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்தேன்.

இவ்வாறு ரிஷப் பந்த் கூறினார்.

இன்றைய போட்டி

டெல்லியில் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 6-வது இடத்தில் உள்ள புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஆடவுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் இன்றைய போட்டியில் டெல்லியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் புனே அணி உள்ளது.

பஞ்சாப் அணியில் ஆம்லா

பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த அணியில் தென் ஆப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆம்லா ஆடுவது இதுவே முதல்முறையாகும்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x