Published : 28 Apr 2016 09:14 AM
Last Updated : 28 Apr 2016 09:14 AM

செய்தித் துளிகள்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு நியமிக்கப் பட்டுள்ளார்.

---------------------------------

ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் காயம் காரணமாக விலகிய மலிங்காவுக்கு பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜெரோம் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.

---------------------------------

ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கு இம்முறை வைல்டுகார்டு கிடையாது என இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் தங்களது தரவரிசை அடிப்படையில் தான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை உருவாகி உள்ளது.

---------------------------------

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மகளிருக்கான உலக ஸ்குவாஷ் போட்டியின் 2-வது சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 3-11, 6-11, 3-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் லாரா மஸரோவிடம் தோல்வியடைந்தார்.

---------------------------------

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய குத்துச்சண்டை சங்கத்தை பதிவு செய்ய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நேற்று தடையில்லா சான்றிதழ் வழங்கியது. சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் மே 14-ம் தேதிக்குக்குள் இந்தியாவில் புதிய குத்துச்சண்டை சங்க அமைப்பை உருவாக்கி தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என காலக்கெடுவை விதித்துள்ளதால் வரும் 8-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x