Published : 23 Oct 2015 11:42 AM
Last Updated : 23 Oct 2015 11:42 AM

சென்னை ஒருநாள் போட்டியில் கவனிக்கத்தக்க 7 தகவல்கள்

சென்னையில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில், தென் ஆப்பிரிக்காவை 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வீழ்த்தியது. ஆட்டநாயகன் விருது கோலிக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் 2-2 என சமநிலை பெற்றது. | விரிவான செய்தி ->டிவில்லியர்ஸின் சாகச சதம் வீண்: சென்னையில் இந்தியா அபார வெற்றி |

சதம் அடித்த 8-வது வீரர்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த 12வது வீரர் கோலி ஆவார். இதற்கு முன்னர் தோனி, யுவராஜ், டிராவிட், மனோஜ் திவாரி (இந்தியா), மார்க்வாக், ஜெப் மார்ஷ் (ஆஸ்திரேலியா), ஜெயவர்த்தனே (இலங்கை), சையத் அன்வர், நசீர் ஜாம்ஷெத் (பாகிஸ்தான்), ஹாரிஸ் (நியூசிலாந்து), பொல்லார்ட் (மேற்கிந்தியத்தீவு) ஆகியோரும் சதம் அடித்துள்ளனர்.

இந்தியாவின் அதிகபட்சம்

சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி அதிகபட்ச ஸ்கோரை (299) நேற்று பதிவு செய்தது. இதற்கு முன்னர் 1997ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 292 ரன்கள் எடுத்திருந்தது.

கெடுபிடி அதிகம்

பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரசிகர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கருப்பு உடை அணிந்து வந்த சில இளைஞர்கள் மைதானத்தின் உள்ளே அனுதிக்கப்படவில்லை. போட்டியின் போது சட்டையை கழற்றி எதும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் வெள்ளை நிற டி ஷர்ட் மீது go india உள்ளிட்ட வாசகங்கள் எழுதி வந்த இளைஞர் ஒருவரையும் போலீஸார் உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

வெறுத்துபோன ரசிகர்கள்

இந்திய அணியின் ரன்குவிப்பு வேகம் கடைசி நேரத்தில் மிகவும் மந்தமானது. அதுவும் கடைசி ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் மைதானம் ரசிகர்களின் ஆரவாரமின்றி அமைதியான சூழல் காணப்பட்டது.

சோதித்த தோனி

தோனி சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். அவர் களமிறங்கிய போது முழுமையாக 5 ஓவர்கள் மீதமிருந்தது. இதனால் அதிரடியாக ஆடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவரோ 16 பந்துகளை சந்தித்து 15 ரன் எடுத்து வெளியேறினார். தோனியின் மந்தமான ஆட்டத்தால் இந்திய அணியால் கடைசி 5 ஓவரில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

14 ஆட்டங்களுக்கு பிறகு

உலககோப்பை போட்டிக்கு பின்னர் கோலி தற்போதுதான் சதம் அடித்துள்ளார். கடந்த 14 ஆட்டங்களில் கோலி ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்தார்.

கோட்டைவிட்ட ரெய்னா

ரெய்னா 46 ரன்னில் கொடுத்த கேட்ச்சை டிவில்லியர்ஸ் மிஸ் செய்தார். எனினும் இந்த வாய்ப்பை ரெய்னா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x