Last Updated : 22 Dec, 2016 08:39 PM

 

Published : 22 Dec 2016 08:39 PM
Last Updated : 22 Dec 2016 08:39 PM

கோலியின் எழுச்சிபூர்வமான தலைமைத்துவமே வெற்றிக்குக் காரணம்: ஜெயசூரியா பாராட்டு

விராட் கோலியின் எழுச்சிபூர்வமான கேப்டன்சியினால் இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தியது என்று முன்னாள் இலங்கை அதிரடி வீரர் சனத் ஜெயசூரியா பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயசூரியா கூறும்போது, “டீம் இந்தியா நல்ல நிலையில் உள்ளது. வலுவான இங்கிலாந்து அணியைக் கூட எளிதாக வீழ்த்த முடிகிறது.

சிறந்த கேப்டனான கோலி தனது பவுலர்களை அருமையாகப் பயன்படுத்துகிறார், அவரே அருமையாக பேட் செய்து முன்னுதாரணமாக திகழ்கிறார்.

கருண் நாயர் முச்சதம் அடித்திருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இத்தகைய மைல்கல்லை எட்டுவதற்கு பெரிய அளவில் பொறுமை மனோபாவம் தேவை. உள்நாட்டு கிரிக்கெட்டில் அயராது ரன்களை இவர் குவித்துள்ளதால் தற்போது அவரால் 303 ரன்கள் என்று கிரிக்கெட் உலகைப் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளார். இவருக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.

கும்ப்ளே தனது பயிற்சிக் காலக்கட்டத்தை இப்போதுதான் தொடங்கியுள்ளார், அவர் விளையாடும் போது ஆதிக்கவாத பவுலராக திகழ்ந்தார். எனவே பயிற்சியாளராகவும் அவர் பெரிய வெற்றி பெறுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x