Last Updated : 27 Apr, 2016 10:03 AM

 

Published : 27 Apr 2016 10:03 AM
Last Updated : 27 Apr 2016 10:03 AM

குஜராத் - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடை பெறும் ஆட்டத்தில் ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ், சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

அறிமுக அணியான குஜராத்தை ரெய்னா சிறப்பாக வழிநடத்துகிறார். 5 ஆட்டத்தில் விளையாடி உள்ள இந்த அணி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் டெல்லி அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியை சந்தித்த போதிலும் தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி பெற்று எழுச்சியுடன் உள்ளது.

இன்று 4-வது வெற்றியை எதிர்நோக்கி உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக சதம் அடித்த குயின்டன் டி காக், மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக விளை யாடிய சஞ்சு சாம்சன், டுமினி, கரண் நாயர் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்ப்பவர்களாக உள்ளனர்.

பந்து வீச்சில் ஜாகீர் கான் தனது அனுபவத்தால் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார். கிறிஸ்மோரிஸ் கடைசி கட்ட ஓவர்களில் ரன் குவிப்பை கட்டுப்படுத்துபவராக உள்ளார். சுழற்பந்து வீச்சில் அமித் மிஸ்ரா, இம்ரன் தகிர் ஆகியோர் ஆட்டத்தின் நடுப்பகுதியில் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல் படுவது பலம் சேர்ப்பதாக உள்ளது.

குஜராத் அணி தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி கண்ட நிலையில் ஐதராபாத் அணியிடம் 4-வது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. எனினும் அடுத்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை புரட்டி எடுத்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது.

டிவைன் ஸ்மித், ஆரோன் பின்ச், பிரண்டன் மெக்கல்லம், பிராவோ, ரெய்னா, தினேஷ் கார்த்திக் என அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது.

தொடக்க வீரர்களாக மெக்கலம், ஸ்மித் ஜோடியை களமிறங்கக் கூடும். ஆல்ரவுண்டர்களான பிராவோ, ஜடேஜாவும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளுமே மேலாதிக்கம் செலுத்த முயலும் என்பதால் வெற்றி பெற கடுமையான போராட்டம் நிலவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x