Published : 09 Apr 2017 10:09 AM
Last Updated : 09 Apr 2017 10:09 AM

குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை: 2-வது வெற்றியை நோக்கி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு ஹைதரா பாத்தில் நடைபெறும் ஆட் டத்தில் நடப்பு சாம்பிய னான சன் ரைசர்ஸ் ஹைத ராபாத், குஜராத் லயன்ஸ் அணி கள் மோதுகின்றன.

ஹைதராபாத் அணி முதல் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியிருந்தது. அதே வேளையில் குஜராத் அணி 10 விக்கெட்கள் வித்தி யாசத்தில் கொல்கத்தா அணி யிடம் அவமானகரமான வகையில் தோல் வியை சந்தித்திருந் தது.

ஹைதராபாத் அணிக்கு யுவராஜ் சிங், ஹென்ரிக்ஸ் ஆகியோரின் அதிரடி பேட்டிங்கும் பென் கட்டிங் கின் ஆல்ரவுண்டர் திறனும் பலம் சேர்க்கிறது. அறிமுக சுழற்பந்து வீச்சளாரான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் முதல் ஆட்டத்தில் 2 விக்கெட்கள் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

குஜராத் அணியில் அனுபவ பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரிய பின்னடைவாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் பிரவீன் குமார் மட்டுமே சிறப்பாக செயல் பட்டார். ஷிவில் கவுசிக், தவல் குல்கர்னி, டுவைன் ஸ்மித் ஆகி யோர் அதிக ரன்களை வாரி வழங்கினர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அதிக மாற்றங்கள் இருக்கக்கூடும். டுவைன் ஸ்மித் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டரான ஜேம்ஸ் பாக்னர் இடம் பெற வாய்ப்புள்ளது.

பேட்டிங்கை பொறுத்த வரையில் குஜராத் அணி பல மாகவே உள்ளது. ஜேசன் ராய், மெக்கலம், ரெய்னா ஆகியோரு டன் தினேஷ் கார்த்திக்கும் அதிரடியாக விளையாடும் திறன் உடையவராக உள்ளார்.

ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பலமாக உள்ளது. ஆசிஷ் நெஹ்ரா, புவனேஷ்வர் குமார், பென் கட்டிங் ஆகியோருடன் ரஷித் கானும் பலம் சேர்க்கிறார். கடந்த ஆட்டதில் சோபிக்க தவறிய கேப்டன் டேவிட் வார்னர் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்த முற்சிக்கக்கூடும்.

இடம்: ஹைதராபாத்

நேரம்: மாலை 4

ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x