Published : 10 Dec 2016 05:00 PM
Last Updated : 10 Dec 2016 05:00 PM

கவாஸ்கர், சச்சின், திராவிடுடன் இணைந்த விராட் கோலியின் சாதனை சதம்

இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் இன்று அதிதிறமை வாய்ந்த ஒரு சதம் எடுத்து 147 ரன்களுடன் ஆடி வரும் விராட் கோலி இதன் மூலம் சிலபல சாதனைகளைப் புரிந்துள்ளார்.

சாதனைத்துளிகள் வருமாறு:

1. இந்திய கேப்டன் ஒருவர் ஒரே தொடரில் 500 ரன்களை எடுத்தவகையில் விராட் கோலி, சுனில் கவாஸ்கருடன் இணைந்துள்ளார். கவாஸ்கர் இதனை இருமுறை சாதித்துள்ளார், மே.இ.தீவுகளுக்கு எதிராக 1978-79 தொடரில் கேப்டனாக கவாஸ்கர் 732 ரன்களை எடுத்தார், பிறகு 1981-82 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 500 ரன்களை ஒரு தொடரில் எடுத்தார்.

2. கேப்டனாக ஒரு ஆண்டில் 1,000 ரன்களை எடுத்த வகையில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிடுடன் இணைந்துள்ளார் விராட் கோலி. சச்சின் 1997-ம் ஆண்டு 1,000 ரன்களையும், 2006-ல் ராகுல் திராவிட் 1095 ரன்களையும் எடுத்தனர், தற்போது விராட் கோலி ஒரே ஆண்டில் 1,000 ரன்களைக் கடந்த கேப்டன் ஆனார்.

3. கோலி தனது 15-வது சதத்தை இன்று தனது 89-வது இன்னிங்சில் எடுத்தார். கவாஸ்கர் மட்டுமே 15 சதங்களை 77 இன்னிங்ஸ்களில் எடுத்து சாதனையை தன்வசம் வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கரும் தனது 15-வது டெஸ்ட் சதத்தை 89-வது இன்னிங்ஸில்தான் எடுத்தார்.

4. 2011-ல் கடைசியாக ராகுல் திராவிட் ஒரே ஆண்டில் 57.25 என்ற சராசரியில் 1,145 ரன்களைக் குவித்தார். தற்போது கோலியுடன் சேர்த்து ஒரு ஆண்டில் ஆயிரம் ரன்களுக்கும் மேல் குவித்த வகையில் 23 இந்திய பேட்ஸ்மென்கள் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

5 ஒரே டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கும் மேல் எடுத்த 5-வது வீரராகிறார் விராட் கோலி. முன்னதாக கோலியே 2014-15 ஆஸ்திரேலிய தொடரில் 692 ரன்களை விளாசி சாதனை புரிந்தார். கவாஸ்கர் சுமார் 6 முறை தொடரில் 500க்கும் மேல் ரன்களை எடுத்துள்ளார். குண்டப்பா விஸ்வநாத், மொஹீந்தர் அமர்நாத், ராகுல் திராவிட் ஆகியோர் இருமுறை ஒரு டெஸ்ட் தொடரில் 500க்கும் மேல் ரன்கள் எடுத்துள்ளனர்.

6. 89 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 4,000 டெஸ்ட் ரன்களை எடுத்ததன் மூலம் 6-வது விரைவு 4,000 ரன் பேட்ஸ்மெனாகிறார் கோலி. விரேந்திர சேவாக் 79 இன்னிங்ஸ்களில் 4,000 ரன்களைக் கடக்க கவாஸ்கர் 81 இன்னிங்ஸ்களிலும், ராகுல் திராவிட் 84 இன்னிங்ஸ்களிலும், சச்சின் 86 இன்னிங்ஸ்களிலும். அசாருதீன் 88 இன்னிங்ஸ்களிலும் 4,000 டெஸ்ட் ரன்களை எட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x