Published : 20 Feb 2017 10:22 AM
Last Updated : 20 Feb 2017 10:22 AM

ஐபிஎல் ஏலம் 2017: இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அதிக மவுசு

ஐபிஎல் 2017ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவில் திங்கட்கிழமை காலை தொடங்கியது. முன்னதாக 4-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஏலம், பிசிசிஐ நிர்வாகத்தில் நடந்த சில மாற்றங்களால் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏறக்குறைய 350 வீரர்கள் இந்த ஏலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் 27 வீரர்கள் இருக்கலாம். அதில் 9 பேர் கண்டிப்பாக மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மொத்தம் 8 அணிகள் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றன.

அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.23.35 கோடி செலவு செய்யலாம். குறைந்தபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 11.5 கோடி மட்டுமே செலவு செய்ய முடியும். 14 வீரர்களே இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஏலத்தில் அதிக வீரர்களை வாங்கும் எனத் தெரிகிறது.

பென் ஸ்டோக்ஸ் சாதனை

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக ரூ. 14.5 கோடிக்கு புனே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ரூ. 2 கோடியில் ஆரம்பித்த இந்த ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. மும்பை, பெங்களூரு அணிகள் ஆரம்பத்தில் போட்டியிட்டன. பின் டெல்லி அணி ஏலம் கேட்க ஆரம்பித்தது. தொடர்ந்து பஞ்சாப், ஹைதராபாத் அணிகளும் ஏலம் கேட்க ஆரம்பித்தன. கடைசியில் புனே அணி ரூ. 14.5 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் தனது பணத்தில் பெரும்பங்கை ஒரு வீரருக்காக புனே அணி செலவழித்தது. சர்வதேச வீரருக்கு ஐபிஎல் ஏலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச தொகை இது. இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் ரூ. 9.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

24 மடங்கு அதிக விலைக்குப் போன இங்கிலாந்து வீரர்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் ரூ. 12 கோடிக்கு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது அவரது அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திலிருந்து 24 மடங்கு அதிக விலை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஏலம் 2017ன் முக்கியப் பதிவுகள்



நியூஸிலாந்து வீரர் லாக்கி ஃபெர்கூசன் - ரூ.50 லட்சம் - புனே அணி வாங்கியது.

இந்திய வீரர் சயான் கோஷ் - ரூ.10 லட்சம் - கொல்கத்தா அணி வாங்கியது.

இந்திய வீரர் மனோஜ் திவாரி - ரூ.50 லட்சம் - புனே அணி வாங்கியது.

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டேரன் பிராவோ - ரூ.50 லட்சம் - கொல்கத்தா அணி வாங்கியது.

முந்தைய சுற்றுகளில் இவரை யாரும் கேட்கவில்லை. கடைசி கட்டத்தில் கொல்கத்தா அணி டேரன் பிராவோவை கேட்டு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர் அக்‌ஷ்தீப் நாத் - ரூ.10 லட்சம் - குஜராத் அணி வாங்கியது.

இந்திய வீரர் பிரதாம் சிங் - ரூ.10 லட்சம் - குஜராத் அணி வாங்கியது.

இந்திய வீரர் ராகுல் திரிபாதி - ரூ.10 லட்சம் - புனே அணி வாங்கியது.

இந்திய வீரர் இஷாங்க் ஜக்கி - ரூ.10 லட்சம் - கொல்கத்தா அணி வாங்கியது.

இந்திய வீரர் சஞ்சய் யாதவ் - ரூ.10 லட்சம் - கொல்கத்தா அணி வாங்கியது.

இந்திய வீரர் சுபம் அகர்வால் - ரூ.10 லட்சம் - குஜராத் அணி வாங்கியது.

இந்திய வீரர் ஷெல்லே சவுர்யா - ரூ.10 லட்சம் - குஜராத் அணி வாங்கியது.

இந்திய வீரர் குல்வந்த் கெஜ்ரோலியா - ரூ.10 லட்சம் - மும்பை அணி வாங்கியது.

இந்திய வீரர் மிலிந்த் டாண்டன் - ரூ.10 லட்சம் - புனே அணி வாங்கியது

இந்திய வீரர் முனாஃப் படேல் - ரூ.30 லட்சம் - குஜராத் அணி வாங்கியது

மேற்கிந்திய தீவுகள் வீரர் டேரன் சாமி - ரூ.30 லட்சம் - பஞ்சாப் அணி வாங்கியது.

மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மென் பவெல் - ரூ.30 லட்சம் - கொல்கத்தா அணி வாங்கியது.

ஆஸ்திரேலிய வீரர் டேன் க்ரிஸ்டியன் - ரூ.1 கோடிக்கு புனே அணி வாங்கியது.

இலங்கை வீரர் அசேலா குணரத்னே - ரூ.30 லட்சம் - மும்பை அணி வாங்கியது

இந்திய வீரர் ராகுல் சாஹ்ர்- ரூ.10 லட்சம் - புனே அணி வாங்கியது

இந்திய வீரர் முகமது சிராஜ் - பல அணிகளின் போட்டிக்கு மத்தியில் ஹைதராபாத் அணி 2.6 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இவரது ஆரம்ப விலை ரூ.20 லட்சம் மட்டுமே

ஆஸ்திரேலிய வீரர் பில்லி ஸ்டான்லேக் - ரூ.30 லட்சம் - பெங்களூரு அணி வாங்கியது

ஆஸ்திரேலிய வீரர் பென் லாஃப்லின் - ரூ.30 லட்சம் - ஹைதராபாத் அணி வாங்கியது

இந்திய வீரர் நவ்தீப் சைனி - ரூ.10 லட்சம் - டெல்லி அணி வாங்கியது

இந்திய வீரர் பிரவீன் துபே - ரூ.10 லட்சம் - பெங்களூரு அணி வாங்கியது

ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் நேதன் கோர்ட்லர் நைல் - ரூ.3.5 கோடி- சன் ரைசர்ஸ் வாங்கியது

இந்திய ஆல் ரவுண்டர் இர்பான் பத்தான் - எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.

கிறிஸ் ஜோர்டான் - ரூ.50 லட்சம் - சன் ரைசர்ஸ் வாங்கியது

சவுரவ் திவாரி - ரூ.30 லட்சம் - மும்பை இந்தியன்ஸ் வாங்கியது

இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் - ரூ.1 கோடி - குஜராத் அணி வாங்கியது , இதன் மூலம் ஏரோன் பிஞ்ச், ஜேசன் ராய் இந்த அணியின் தொடக்க வீரர்கள்

டிரெண்ட் போல்ட்டை ரூ.5 கோடிக்கு தன் அணிக்கு ஏலம் எடுத்தது குறித்து கொல்கத்தா கேப்டன் கம்பீர் மகிழ்ச்சி

ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் - ரூ. 1.5 கோடி - யாரும் வாங்கவில்லை

இந்திய வீரர் மன்ப்ரீத் கோனி - ரூ. 60 லட்சம் - குஜராத் அணி வாங்கியது

வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் - ரூ.2.8 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் வாங்கியது

இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் - ரூ.30 லட்சம் - புனே அணி வாங்கியது

ஆர்.பி.சிங், ஆஸி. முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் ஆகியோர் வாங்கப்படவில்லை.

வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி - ரூ.50 லட்சம் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் வாங்கியது

ஆல்ரவுண்டர்கள் சுற்றில் கடைசியாக திசர பெரேரா, தென் ஆப்பிரிக்காவின் பெஹார்டீன் ஆகியோரை வாங்க யாரும் முன்வரவில்லை

ரிஷி தவண் - ரூ.55 லட்சம் - கொல்கத்தா அணி வாங்கியது

ஆல் ரவுண்டர் கரன் சர்மா (ரூ.30 லட்சம்) - ரூ.3.2 கோடி - மும்பை இந்தியன்ஸ் வாங்கியது

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் - ரூ.4.2 கோடி - கொல்கத்தா அணி வாங்கியது

காஷ்மீரைச் சேர்ந்த இந்திய லெக் ஸ்பின்னர் பர்வேஸ் ரசூல் - வாங்க ஆளில்லை

பிக்ஹிட்டிங் மே.இ.தீவுகள் வீரர் எவின் லூயிஸ், டேரன் பிராவோ ஆகியோரை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை

சமீபத்தில் பந்து வீச தடை நீக்கம் செய்யப்பட்ட மே.இ.தீவுகள் அதிரடி வீரர் மர்லன் சாமுவேல்ஸ் - யாரும் வாங்கவில்லை.

தமிழக ரஞ்சி வீர்ர் அபினவ் முகுந்த் மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் பத்ரிநாத் ஆகியோரும் விற்கப்படவில்லை

இந்திய டெஸ்ட் வீரர் செடேஷ்வர் புஜாராவை வாங்க எந்த அணியும் முன் வரவில்லை.

45 வயது லெக்ஸ்பின் பவுலர் பிரவீண் தாம்பே - ரூ.10 லட்சம்- ஹைதராபாத் அணி வாங்கியது

ஆப்கான் வீரர் ரஷீத் கான் - ரூ.4 கோடி- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது

புதிர் ஸ்பின்னர் என்று அறியப்படும் தேஜஸ் சிங் பரோகா - ரூ.10 லட்சம்- குஜராத் அணி வாங்கியது

தமிழக லெக் ஸ்பின்னர் முருகன் அஸ்வின் - ரூ. 1 கோடி - டெல்லி டேர் டெவில்ஸ் வாங்கியது

கேரளாவின் பாஸில் தம்பி - ரூ.85 லட்சம்- குஜராத் அணி வாங்கியது

நவ்தீப் சைனி, பவன் சுயால் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. நவ்தீப் சைனி ஆஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டேவிட் வார்னரை பவுன்சரில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர் நாது சிங் - ரூ. 50 லட்சம் - குஜராத் அணி வாங்கியுள்ளது

இந்திய வீரர் நடராஜன் - ரூ.3 கோடி - கடும் போட்டிக்கு இடையே பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.

சின்னப்பம்பட்டியிலிருந்து ரஞ்சி, ஐபிஎல் வரை...- தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனின் பயணம் குறித்து படிக்க இந்த இணைப்பைத் தொடரவும் - >http://bit.ly/2mdBIST

இந்திய வீரர் அனிகேத் சவுத்ரி - ரூ.2 கோடி - பெங்களூரு அணி வாங்கியுள்ளது

இந்திய வீரர் ஏகலவ்யா த்விவேதி- ரூ.75 லட்சம் - ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது

இந்திய வீரர் ஆதித்யா தாரே - ரூ.25 லட்சம் - டெல்லி அணி வாங்கியுள்ளது

இந்திய வீரர் ராகுல் டெவாடியா - ரூ.25 லட்சம் - பஞ்சாப் அணி வாங்கியது

இந்திய வீரர் கே.கவுதம் - ரூ. 2 கோடிக்கு மும்பை அணி வாங்கியது.

ரூ. 10 லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவரது ஏலத்துக்கு கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. கடைசியில் மும்பை அணி அவரை 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி - ரூ. 30 லட்சம் - ஹைதராபாத் அணி வாங்கியது

ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள முதல் ஆப்கான் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர் தன்மய் அகர்வால் - ரூ.10 லட்சம் - ஹைதராபாத் அணி வாங்கியது

இந்திய வீரர் உன்முக்த் சந்த் - ரூ.30 லட்சம் - யாரும் வாங்கவில்லை.

இந்திய வீரர் அங்கீத் பவானே - ரூ. 10 லட்சம் - டெல்லி அணி வாங்கியது

டெல்லி டேர்டெவில்ஸ் 9 சர்வதேச வீரர்களை ஏலத்தில் வாங்கிவிட்டதால் இனி இந்திய வீரர்களை மட்டுமே வாங்க முடியும்.

தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் - ரூ.50 லட்சம் - யாரும் வாங்கவில்லை.

இந்திய வீரர் ப்ரக்யான் ஓஜா - ரூ.30 லட்சம் - யாரும் வாங்கவில்லை.

ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் - ரூ. 50 லட்சம் - யாரும் வாங்கவில்லை.

இந்திய வீரர் இஷாந்த் சர்மா - ரூ. 2 கோடி - யாரும் வாங்கவில்லை

நியூஸிலாந்து வீரர் கைல் அபாட் - ரூ.1.5 கோடி - யாரும் வாங்கவில்லை

ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஜான்சன் - ரூ. 2 கோடி - மும்பை அணி வாங்கியது.

ஆஸ்திரேலிய வீரர் பாட் கமின்ஸ் - ரூ. 4.5 கோடி - டெல்லி அணி வாங்கியது.

இங்கிலாந்து வீரர் டைமல் மில்ஸ் - ரூ. 12 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது.

நியூஸிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் - ரூ. 5 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்க வீரர் ககிஸோ ரபாடா - டெல்லி அணி ரூ. 5 கோடிக்கு வாங்கியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் - ரூ. 30 லட்சம் - மும்பை அணி வாங்கியுள்ளது

மேற்கிந்திய தீவுகள் வீரர் ஆண்ட்ரே ஃப்ளெட்சர் - ரூ. 30 லட்சம் - யாரும் வாங்கவில்லை

இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ - ரூ 1.5 கோடி - யாரும் வாங்கவில்லை

நியூஸிலாந்து வீரர் கோரே ஆண்டர்சன் - ரூ. 1 கோடி - டெல்லி அணி வாங்கியுள்ளது

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் - கடும் போட்டிக்கு இடையே ரூ. 14.5 கோடிக்கு புனே அணி வாங்கியுள்ளது.

இந்திய வீரர் இர்ஃபான் பதான் - ரூ. 50 லட்சம் - யாரும் வாங்கவில்லை

இலங்கை வீரர் ஏஞ்சலோ மாத்யூஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு வாங்கியது.

இந்திய வீரர் பவன் நெகி - கடும் போட்டிக்கு நடுவில் பெங்களூரு அணி ரூ. 1 கோடிக்கு வாங்கியுள்ளது

இந்திய வீரர் சவுரவ் திவாரி - ரூ. 30 லட்சம் - யாரும் வாங்கவில்லை

நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லர் - ரூ. 50 லட்சம் - யாரும் வாங்கவில்லை

இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் - ரூ. 1 கோடி - யாரும் வாங்கவில்லை

இங்கிலாந்து வீரர் ஜேஸன் ராய் - ரூ. 1 கோடி - யாரும் வாங்கவில்லை

இங்கிலாந்து வீரர் இயான் மார்கன் - ரூ.2 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது

முதல் வீரராக நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்டில் ஏலம் விடப்பட்டார். ஆனால் அவரை எந்த அணியும் வாங்கவில்லை - விலை ரூ. 50 லட்சம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x