Published : 11 Mar 2016 10:02 AM
Last Updated : 11 Mar 2016 10:02 AM

உலக கோப்பைக்கு இவர்கள் புதுமுகங்கள்

இந்தியாவின் ஜஸ்ப்ரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, பவன் நேகி ஆகியோர் முதல் முறையாக டி 20 உலக கோப்பையில் களமிறங்குகின் றனர். பும்ரா தனது ஸ்லிங் ஷாட் பந்து வீச்சு முறையால் அசத்தி வருகிறார். 22 வயதான அவரது வழக்கத்துக்கு மாறான பந்து வீச்சு முறை இந்திய அணிக்கு பலம் சேர்த்து வருகிறது.

பேட்டிங்கில் அதிரடி, பந்து வீச்சில் விரைவான செயல்பாடு ஆகியவற்றால் ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். பவன் நேகி, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சிறப்பாக ஆடி உள்ளார். ஆசிய கோப்பையில் ஒரு ஆட்டத்தில் பங்கேற்ற அவர் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினாலும், பேட்டிங் கில் கடைசி கட்டத்தில் கைகொ டுக்கும் திறன் கொண்டவர். 3வது சுழற்பந்து வீச்சாளர் களமிறக்கப் பட்டால் இவரே தோனியின் முதல் தேர்வாக இருப்பார்.

வங்கதேச அணியில் முஸ்டா பிஹூர் ரஹ்மானுக்கு இது முதல் உலக கோப்பை ஆகும். தனது மிதவேக பந்து வீச்சில் அதிக மாறுதல்களை கொண்டு எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் திறன் கொண்டவர். கடந்த ஆண்டு வங்கதேசத்திடம் ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி இழக்க முஸ்டாபிஹூர் ரஹ்மான் பந்து வீச்சு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. அணியில் உஸ்மான் ஹவாஜாவும் முதல் முறையாக உலக கோப்பையில் களம் காண்கிறார். 29 வயதான இடது கை பேட்ஸ்மேனான அவர் பிக் பாஷ் டி 20 தொடரில் 2 சதங்கள் விளாசி உள்ளார்.

இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்க் கும் இதுதான் முதல் உலக கோப்பை. கடந்த முறை காயத் தால் அவர் வாய்ப்பை தவற விட்டார். சமீபத்தில் தென் ஆப்பிரிக் காவுக்கு எதிரான டெஸ்டில் 163 பந்துகளில் அதிவேக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடாவுக்கு இது முதல் உலக கோப்பை. 20 வயதான அவர் 150 கி.மீ. வேகத்தை தொடும் அளவுக்கு பந்து வீசும் திறன் கொண்டவர். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டரும் முதல் முறையாக உலக கோப்பை தொடரை சந்திக்கிறார். மிக உயரமான அவர் பந்து வீச்சுடன், பேட்டிங்கிலும் கைகொடுக்கக்கூடியவர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x