Last Updated : 05 Oct, 2015 10:32 AM

 

Published : 05 Oct 2015 10:32 AM
Last Updated : 05 Oct 2015 10:32 AM

இரண்டாவது டி20 ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவை பழிதீர்க்குமா இந்தியா?

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கட்டாக் நகரில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் பெற்ற தோல்விக்கு பழிவாங்கும் முனைப்புடன் இந்திய அணி இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது. இதில் தர்மசாலாவில் நடைபெற்ற முதலாவது டி20 விளையாட்டுப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரு அணிகளிடையேயான 2-வது டி20 போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது.

தோனிக்கு நெருக்கடி

இந்திய அணியைப் பொறுத்த வரை முதல் போட்டியில் தோற்ற தால் இன்றைய போட்டியில் வென்று தொடரை சமன் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

குறிப்பாக 3 மாத ஓய்வுக்கு பிறகு இந்திய அணியை வழி நடத்திச் செல்லும் கேப்டன் தோனி, இன்றைய போட்டியில் வென்று தனது ஆற்றலை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக் கிறார். ஏற்கெனவே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுத்தந்த கோலி யை டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கும் கேப்டனாக்க வேண்டும் என்று சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள். இன்றைய போட்டியில் இந்தியா தோற்கும் பட்சத்தில் தோனியின் கேப்டன் பதவிக்கு நெருக்கடி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

முதல் போட்டி நடந்த தர்மசாலா கிரிக்கெட் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருந்தது. ஆனால் இன்றைய போட்டி நடக்கும் பாராபதி கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் பலமான அணியாக கருதப்படும் இந்திய அணிக்கு இது சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இன்றைய போட்டி குறித்து நேற்று கட்டாக்கில் நிருபர்களிடம் பேசிய இந்திய வீரர் ரோஹித் சர்மா, “முந்தைய போட்டியில் இருந்து நாங்கள் சில விஷயங் களை கற்றுக்கொண்டோம். பேட்டிங்கிலும், பந்துவீச் சிலும் நாங்கள் சில விஷயங்களைச் சரி செய்ய வேண்டியுள்ளது. கட்டாக் கில் நடைபெறவுள்ள போட்டியில் நாங்கள் வலுவாக திரும்பி வருவோம்” என்றார்.

உற்சாகத்தில் தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியில் வென்ற உற்சாகத்துடன் அந்த அணி இன்றைய போட்டியில் களம் இறங்குகிறது. அந்த அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸி, ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோர் ஐபிஎல் போட்டிகளின்போது இந்திய மைதானங்களில் ஆடி நல்ல அனுபவத்தை பெற்றுள்ளனர். அந்த அனுபவம் தென் ஆப்பிரிக்க அணிக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜே.பி.டுமினி, பெஹார்டியன் ஆகியோர் நல்ல பார்மில் இருப் பதும் அந்த அணியை உற்சாகப் படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியில் வென்று டி20 தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணி உள்ளது.

இந்தியா:

மேகந்திர சிங் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), நாத் அரவிந்த், அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, ஷிகர் தவன், ஹர்பஜன் சிங், விராட் கோலி, புவேனஸ்வர் குமார், அமித் மிஸ்ரா, அக்‌ஷர் படேல், அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, மோஹித் சர்மா, ரோஹித் சர்மா.

தென் ஆப்பிரிக்கா:

டூ பிளெஸ்ஸி (கேப்டன்), கைல் அபாட், பர்ஹான் பெஹார்டியன், குயின்டன் டி காக் (விக்ெகட் கீப்பர்), மெர்ச்சன்ட் டி லேஞ்சி, ஏ.பி.டிவில்லியர்ஸ், ஜே.பி.டுமினி, இம்ரான் தாஹிர்,

எட்டி லீய், டேவிட் மில்லர், அல்பி மோர்கல், கிறிஸ் மோரிஸ், காகிஸோ ரபாடா, கயாஸோண்டோ.

இதுவரை...

இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இதுவரை 9 சர்வதேச டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 6 போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மழையால் ஆட்டம் பாதிக்குமா?

டி20 போட்டி நடக்கும் கட்டாக் நகரில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அங்கு மேலும் 2 நாட்களுக்கு விட்டு விட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படுேமா என்ற கவலை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டி

போட்டி நேரம்: இரவு 7 மணி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x