Published : 08 Dec 2015 09:57 AM
Last Updated : 08 Dec 2015 09:57 AM

இந்திய - தெ.ஆ. டெஸ்ட்: கேப்டன்களின் குரல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக அஜிங்க்ய ரஹானேவும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விராட் கோலி:

அனைத்து வெற்றிகளுமே சிறப்புவாய்ந்தவை தான். ஆனால் இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனேனில் இதை பெறுவதற்கு நாங்கள் கடினமாக உழைத்தோம். தென் ஆப்பிரிக்க வீரர்கள் டிராவை நோக்கிய ஆடிய நிலையில் நாங்கள் கடுமையாக போராடினோம். அவர்களின் தற்காப்பு ஆட்டமும், பந்தை எதிர்கொண்ட விதமும் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் பொறுமையை இழக்கவில்லை. இந்த ஆட்டம் அணியின் ஒட்டுமொத்த வலிமையை காட்டியது. தனியாக நான் எதையும் செய்யவில்லை. அணியில் உள்ள 11 வீரர்களுமே வெற்றிக்கு உரித்தானவர்கள்.

ஹஸிம் ஆம்லா:

நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று ஆடுவது கடினம் என்பது எங்களுக்கு தெரியும். எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தோம். டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக இந்த தொடர் முழுவதுமே நாங்கள் மோசமாக செயல்பட்டோம். இந்திய வீரர்கள் பேட்டிங், பந்து வீச்சில் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர்.

டி 20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரை அருமையாக விளையாடி வென்றோம். ஆனால் டெஸ்ட் தொடர் எங்களது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக அமைந்துவிட்டது. நாங்கள் போதிய ரன்களை சேர்க்கவில்லை. இதுபோன்ற ஆடுகளங்களில் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் பேட்டிங்கில் போதுமான ரன் சேர்த்து நாங்கள் அவர்களுக்கு உதவ தவறிவிட்டோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x