Published : 01 Jul 2016 09:48 AM
Last Updated : 01 Jul 2016 09:48 AM

அரையிறுதிக்கு முன்னேறுவது யார்?- வேல்ஸ் - பெல்ஜியம்: இன்று மோதல்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் இன்று வேல்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. லில்லி நகரில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை சோனி இஎஸ்பிஎன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

பெல்ஜியம் அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரு கிறது. அந்த அணி லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.இரண்டாவது ஆட்டத்தில் அயர்லாந்தை 3-0 என்ற கணக்கிலும், கடைசி ஆட்டத்தில் சுவீடனை 1-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியிருந்தது. நாக் அவுட் சுற்றில் ஹங்கேரியை 4-0 என்ற கோல் கணக்கில் பந்தாடி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

தன்னம்பிக்கை

1980-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன் னேறியதை போன்று இம்முறையும் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி ஆயத்தமாகி உள்ளது. அந்த அணியில் டி புருனி, ஈடன் ஹஸார்டு, மிஸி, லுஹாகு, யானிக் காரஸ்கோ ஆகியோர் நட்சத்திர வீரர்களாக உள்ளனர். பெல் ஜியம் அணிக்கு இது 5-வது யூரோ கோப்பை தொடராகும். அந்த அணி1980-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்தது.

இந்த முறை நாக் அவுட் சுற்றில் ஹங்கேரியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றிருந்தது. அந்த அணி இவ்வளவு கோல்கள் வித்தி யாசத்தில் பெரிய தொடர்களில் இதற்கு முன்னர் வெற்றி பெற்றதில்லை.

லில்லி நகரில் இதற்கு முன்னர் பெல் ஜியம் இரு போட்டிகளில் விளையாடி உள்ளது. 1914-ல் நட்பு ரீதியிலான ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியடைந்திருந்தது. அதன் பின்னர் 1989-ல் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் லக்ஸர்பர்க் அணியை பந்தாடியிருந்தது.

மதிநுட்பம்

‘‘பெல்ஜியம் அணியின் நடுகள வீரர் டி புருனி கூறும்போது, நாங்கள் தொழில் நுட்பத்துடனும், மதி நுட்பத்துடனும் உள்ள அணி. ஹங்கேரி அணிக்கு எதிராக எப்படி விளையாடினோமோ, அதே போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்துவோம்’’ என்றார்.

வேல்ஸ்

வேல்ஸ் அணி ஒரு முறை கூட இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கிடை யாது. அதிகபட்சமாக காலிறுதி வரை எட்டிப்பார்த்துள்ளது. 1976-ம் ஆண்டு யூரோ தொடரின் காலிறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லேவியாவிடம் தோல்விகண்டிருந்தது. இம்முறை வேல்ஸ் அணி லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் சுலோவேக்கியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. 2-வது ஆட் டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் இங்கி லாந்திடம் தோல்வியை சந்தித்தது. கடைசி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை தோற்கடித்தது. நாக் அவுட் சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தை வென்றது

நட்சத்திர வீரரான கரேத் பாலே 3 கோல்கள் அடித்துள்ளார். ஒரு கோல் அடிக்க உதவியாக இருந்துள்ளார். இவரை அணி பெரிதும் நம்பி உள்ளது. பாலேவுடன் ஆரோன் ராம்ஸே, ஜோ ஆலென் தலிஸ் மான், நெய்ல் டெய்லர் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர்.

தகுதி சுற்று போட்டியின் இரு ஆட்டங்களிலும் வேல்ஸ் அணி பெல் ஜியத்தை வீழ்த்தியிருந்தது. இந்த இரு ஆட்டத்திலும் பெல்ஜியம் அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இன்றைய ஆட்டத் திலும் பெல்ஜியத்தை வீழ்த்தி முதன் முறையாக அரையிறுதிப்போட்டிக்கு முன் னேறும் முனைப்பில் உள்ளது வேல்ஸ்.

பெனால்டி ஷூட் அவுட்

பெல்ஜியம் அணி இதுவரை விளையாடி உள்ள போட்டிகளில் இரு முறை மட்டுமே பெனால்டி ஷூட் அவுட்டை எதிர்கொண்டுள்ளது. 1986 உலகக் கோப்பை காலிறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. 1998-ல் நடைபெற்ற நட்பு ரீதியிலான ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்திருந்தது. அதேவேளையில் வேல்ஸ் அணி ஒரு முறைகூட பெனால்டி ஷூட் அவுட்டை எதிர்கொண்டதில்லை.

எல்லை சாதகம்

இன்றைய ஆட்டம் நடைபெறும் லில்லி நகரம் பெல்ஜியம் நாட்டில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது. இதனால் வேல்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தை பெல்ஜியம் அணி தனது சொந்த நாட்டில் நடைபெறும் போட்டியாகவே கருதுகிறது.

நேரம் : 12.30 நள்ளிரவு ஒளிபரப்பு : சோனி இஎஸ்பிஎன்

நேருக்கு நேர்

இரு அணிகளும் சர்வதேச அளவில் 12 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் பெல்ஜியம் 5 ஆட்டத்திலும், வேல்ஸ் 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்திருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x