Last Updated : 08 Sep, 2015 09:44 AM

 

Published : 08 Sep 2015 09:44 AM
Last Updated : 08 Sep 2015 09:44 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச், சிலிச், செரீனா

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர் பியாவின் நோவக் ஜோகோவிச், குரேஷியாவின் மரின் சிலிச், அமெரிக்காவின் செரீனா வில்லி யம்ஸ் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் உல கின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் தனது 4-வது சுற்றில் 6-2, 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பவுதிஸ்டா அகட்டை தோற்கடித்தார்.

இந்த ஆண்டில் 60-வது வெற்றியைப் பதிவு செய்திருக்கும் ஜோகோவிச், வெற்றி குறித்துப் பேசுகையில், “பவுதிஸ்டா வெற்றி வேட்கையோடு கடுமையாகப் போராடினார். இது மிகச்சிறந்த ஆட்டமாகும். 2-வது செட்டை நான் கைப்பற்றுவதற்கான வாய்ப் பிருந்தபோதும் அதைப் பயன் படுத்திக் கொள்ளவில்லை. அத னால் அந்த செட் பவுஸ்திடா வச மானது” என்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தொடர்ந்து 26-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஜோகோவிச், அடுத்ததாக மற்றொரு ஸ்பெயின் வீரரான பெலி ஸியானோ லோபஸை சந்திக்கிறார்.

14-வது முறையாக அமெரிக்க ஓபனில் விளையாடி வரும் லோபஸ் முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். அவர் 6-3, 7-6 (5), 6-1 என்ற நேர் செட் களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை வீழ்த்தினார். வெற்றி குறித்துப் பேசிய லோபஸ், “ஃபாக்னினி தனது முந்தைய சுற்றில் இறுதி செட்டில் அசத்தலாக ஆடி நடாலை வீழ்த்தியதைப் பார்த்தேன். எனக்கு எதிராகவும் அவர் அதேபோன்று ஆடக்கூடும் என்ற அச்சுறுத்தல் எனக்குள் இருந்தது” என்றார்.

ஜோகோவிச்சும், போட்டித் தர வரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் லோபஸும் இதுவரை 5 முறை மோதியுள்ளனர். அவை யனைத்திலும் ஜோகோவிச்சே வெற்றி கண்டுள்ளார். இதில் 2007 ஆஸ்திரேலிய ஓபனில் மட்டுமே ஜோகோவிச்சுக்கு எதிராக ஒரு செட்டை கைப்பற்றியிருக்கிறார் லோபஸ். எஞ்சிய அனைத்திலும் நேர் செட்களில் தோற்றுள்ளார்.

சிலிச்-சோங்கா மோதல்

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குரேஷியாவின் மரின் சிலிச் 6-3, 2-6, 7-6 (2), 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜெர்மி சார்டியை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் 23 ஏஸ்களை விளாசிய சிலிச், வெற்றி குறித்துப் பேசுகை யில், “2-வது செட்டின்போது எனது கணுக்கால் திருகியது. ஆனால் அது எனது ஆட்டத்தைப் பாதிக்காத வாறு பார்த்துக்கொள்ள முயற்சித் தேன். 3-வது செட்டின் ஆரம்ப கேம்களில் மிகுந்த எச்சரிக்கை யோடு ஆடினேன் அதன்பிறகு எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.

அமெரிக்க ஓபனில் 4-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி யிருப்பதோடு, தொடர்ச்சி யாக 11 வெற்றிகளை பதிவு செய்திருக்கும் சிலிச், அடுத்ததாக மற்றொரு பிரான்ஸ் வீரரான ஜோ வில்பிரைட் சோங்காவை சந்திக்கிறார்.

சோங்கா தனது 4-வது சுற்றில் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான பெனாய்ட் பேரை வீழ்த்தினார். சிலிச்சும், சோங்காவும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சிலிச் 4 வெற்றிகளையும், ஒரு தோல்வி யையும் சந்தித்துள்ளார். கடைசியாக மோதிய 3 ஆட்டங் களிலும் நேர் செட்களில் சோங் காவை வீழ்த்தியுள்ளார் சிலிச்.

செரீனா-வீனஸ் மோதல்

இன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக் காவைச் சேர்ந்த செரீனா வில்லி யம்ஸ்-வீனஸ் வில்லியம்ஸ் சகோத ரிகள் மோதுகின்றனர். காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வெல்வதில் தீவிரமாக இருக்கும் செரீனா, தனது 4-வது சுற்றில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான மேடிசன் கீஸை தோற்கடித்தார்.

போட்டித் தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் வீனஸ் வில்லியம்ஸ் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 152-வது இடத்தில் இருந்த எஸ் தோனியாவின் அனெட் கொன்டா வெய்டை வீழ்த்தினார்.

புச்சார்டு விலகல்

மற்றொரு 4-வது சுற்றில் இத் தாலியின் ராபர்ட்டா வின்ஸியை எதிர்த்து விளையாடவிருந்த கனடாவின் யூஜீனி புச்சார்டு ஓய்வறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து 4-வது சுற்றில் விளை யாடாமலேயே காலிறுதிக்கு முன்னேறினார் ராபர்ட்டா வின்ஸி.

ஒற்றையர் பிரிவு மட்டுமின்றி, இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் இருந்தும் புச்சார்டு விலகிவிட்டதாக போட்டி இயக்குனர் டேவிட் பீரிவர் தெரிவித்துள்ளார்.

ராபர்ட்டா வின்ஸி தனது காலி றுதியில் பிரான்ஸின் கிறிஸ்டினா மேட்னோவிச்சை சந்திக்கிறார். மேட்னோவிச் தனது 4-வது சுற்றில் 7-6 (2), 4-6, 6-1 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரி சையில் 13-வது இடத்தில் இருந்த ரஷ்யாவின் எக்டெரினா மக ரோவாவை வீழ்த்தினார்.

சானியா ஜோடி முன்னேற்றம்

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்த ஜோடி தங்களின் 3-வது சுற்றில் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் மைக்கேலா கிராஜிசெக்-செக்.குடியரசின் பர்போரா ஸ்ட்ரைகோவா ஜோடியை தோற்கடித்தது.

சானியா ஜோடி தங்களின் காலிறுதியில் போட்டித் தரவரிசை யில் 9-வது இடத்தில் இருக்கும் சீன தைபேவின் யங் ஜான் சான்-ஹாவ் சிங் சான் ஜோடியை சந்திக்கிறது. சீன தைபே ஜோடி தங்களின் முந்தைய சுற்றில் 5-7, 6-1, 7-6 (4) என்ற செட் கணக்கில் ருமேனியாவின் ஐரினா-ரலுகா ஒலாரு ஜோடியை வீழ்த்தியது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x