Published : 06 Dec 2014 03:18 PM
Last Updated : 06 Dec 2014 03:18 PM

அனுபவத்தை விட ஃபார்ம் முக்கியம்: 5 மூத்த வீரர்கள் புறக்கணிப்பு குறித்து சுனில் கவாஸ்கர்

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான 30 வீரர்கள் கொண்ட பட்டியலில் சேவாக், கம்பீர், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் கான் இடம்பெறாதது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் சுனில் கவாஸ்கர் இவர்கள் இடம்பெறாதது ஒன்றும் ஆச்சரியமல்ல, அனுபவத்தை விட நடப்பு ஃபார்ம் முக்கியம் என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

“இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர்கள் ஆடும் 11 வீரர்களில் இடம்பெறவில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை எடுத்து, ரன்களை அடித்திருந்தால் நிச்சயம் இடம்பெற்றிருப்பார்கள்.

ஆனால், கிரிக்கெட் இப்போது வேகம், விரைவு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இந்த நிலையில் அணிகள் பாசஞ்சரை நம்பமுடியாதல்லவா?

வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியில் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும், அங்கு அனுபவம் பெருமதிப்புடையதாக இருக்கும். ஆனால், உண்மை என்னவெனில் (5 வீரர்கள்) ஃபார்மில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். 30 வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது அவர்கள் இப்போதுள்ள ஃபார்மின்மையை சுட்டுவதாகும்.

இது பழக்கமில்லாததுதான், ஆனால் இதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் இயல்பு. இப்படித்தான் கிரிக்கெட் ஆட்டம் வளர்ச்சி கண்டுள்ளது.

அதற்காக அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனமாகி விட்டது என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு, முடிந்து விட்டது என்று நினைப்போம் ஆனால் அவர்கள் டன் கணக்கில் ரன்களை அடித்து மீண்டும் தங்களைத் தேர்வு செய்ய வலியுறுத்தலாம், யார் கணிக்க முடியும்?” என்கிறார் சுனில் கவாஸ்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x