Published : 26 Oct 2016 03:07 PM
Last Updated : 26 Oct 2016 03:07 PM

அதிக டெஸ்ட் தொடர்களில் வென்ற ஆசிய கேப்டன்: மிஸ்பா உல் ஹக் புதிய சாதனை

10 டெஸ்ட் தொடர்களை வென்று அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற ஆசிய கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக்.

அபுதாபியில் நேற்று மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியதன் மூலம் மிஸ்பா இந்த சாதனையை நிகழ்த்தினார். சவுரவ் கங்குலி, தோனி ஆகியோர் 9 டெஸ்ட் தொடர்களை வெல்ல, ஜாவேத் மியாண்டட், ரணதுங்கா 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளனர்.

அபுதாபியில் பாகிஸ்தான் 9 டெஸ்ட் போட்டிகள் விளையாடியதில் 5-0 என்று முன்னிலை வகிக்கிறது. துபாயில் பாகிஸ்தான் வெற்றி விகிதம் 6-2, ஷார்ஜாவில் 4-3 என்பது குறிப்பிடத்தக்கது.

யாசிர் ஷா 112 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஜார்ஜ் லோமான், சிட்னி பார்ன்ஸ் ஆகியோருடன் இணைந்துள்ளார். அதாவது முதல் 18 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் என்ற சாதனையில் இணைந்துள்ளார். மேலும் சயீத் அஜ்மலுக்குப் பிறகு யு.ஏ.இ-யில். 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் ஆனார் யாசிர் ஷா.

டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓராண்டில் இரண்டு 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 7-வது பாகிஸ்தான் பவுலரானார் யாசிர் ஷா. இங்கிலாந்தில் 141 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் மே.இ.தீவுகளுக்கு எதிரான நேற்று முடிந்த அபுதாபி டெஸ்டில் 10/210 என்றும் இருமுறை இந்த ஆண்டு 10 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார் யாசிர் ஷா. ஆனால் அப்துல் காதிர் 1987-ம் ஆண்டு மூன்று முறை 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 10 விக்கெட்டுகளை சாய்க்கும் போது அதிக ரன்கள் கொடுத்ததில் 2-வது பாகிஸ்தான் பவுலர் என்ற நிலையில் உள்ளார் யாசிர் ஷா. இவர் 10 விக்கெட்டுகளுக்கு 210 ரன்களை விட்டுக் கொடுத்தார். அப்துல் காதிர் ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 218 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x