Published : 18 Dec 2014 03:12 PM
Last Updated : 18 Dec 2014 03:12 PM

வார ராசிபலன் 18-12-2014 முதல் 24-12-2014 வரை துலாம் முதல் மீனம் வரை

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சுக்கிரன் ஆகியோரும், 6-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமான காரியங்கள் சில இப்போது நிறைவேறும். நிர்வாகம், அரசியல், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அரசாங்கத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பெண்களுக்கு உற்சாகமான போக்கு தென்படும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும்.

நிலம், மனை, வீடு, வாகனங்களால் வருவாய் கிடைக்கும். புதன் 3-ல் உலவுவதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். இயந்திரங்கள், தாதுப் பொருட்கள், மூலம் ஆதாயம் கிடைக்கும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்-வாங்கலில் அபிவிருத்தி காணலாம். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 18, 24.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, வான் நீலம், பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 7.

பரிகாரம்: துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது. மகாவிஷ்ணுவை வழிபடவும். ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவுவது நல்லது.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 3-ல் அதிபலம் பெற்றிருப்பதாலும், புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். பொருளாதார நிலை உயரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைத்துவரும். கலைஞர்களது நோக்கம் நிறைவேறும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும்.

வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். 22-ம் தேதி முதல் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்துசேரும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். முக்கியஸ்தர்களது சந்திப்பால் பயன் பெறுவீர்கள். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் சேர்க்கையும் நிகழும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 18, 23, 24.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், சிவப்பு.

எண்கள்: 4, 5, 6, 9.

பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடவும்.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும், 9-ல் குரு, 10-ல் ராகு ஆகியோரும் சஞ்சரிப்பதால் முக்கியமான எண்ணங்கள் ஒன்றிரண்டு வார முன்பகுதியில் நிறைவேறும். பெரியவர்களும் தனவந்தர்களும் உதவுவார்கள். மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். 12-ல் சனி இருப்பதால் செலவுகள் சற்று கூடும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். சிலர் குடும்பத்தை விட்டு வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டிவரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது நோக்கம் ஈடேறும். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும்.

பிறரால் புகழப்படுவீர்கள். புத்திசாலித்தனமும், தொழில் நுட்பத்திறமையும் வெளிப்படும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். 4-ல் கேது இருப்பதால் தாய் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடவும். அலைச்சல் சற்று கூடும் என்றாலும் அதற்கான பயன் கிடைத்துவரும். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 18, 23, 24.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், கறுப்பு, இளநீலம், வெண்மை.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 8.

பரிகாரம்: கேது, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. பார்வையற்றவர்களுக்கு உதவவும். விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடவும்.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 11-ல் சனி, 12-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தியானம், யோகா ஆகியவற்றில் நாட்டம் கூடும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். பொதுநலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். தொழிலாளர்களும் விவசாயிகளும் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கறுப்பு, கருநீல நிறப்பொருட்கள், பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்கள், இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் லாபம் தரும்.

வாரப்பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். தந்தையாலும், அரசாங்கத்தாராலும், நண்பர்களாலும் உறவினர்களாலும் பிரச்சினைகள் சூழும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். 22-ம் தேதி முதல் குரு 7-ம் இடம் மாறுவதால் அலுவலகப் பணியாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 18, 24.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, மெரூன்.

எண்கள்: 6, 7, 8.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். மகாவிஷ்ணுவை வழிபடவும். ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவவும். பார்வையற்றவர்களுக்கு உதவவும்.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ம் இடத்தில் சனியும், 11-ல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரும் உலவுவது சிறப்பு. நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பொதுநலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். மூத்த சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களைப் பாராட்டுவார்கள். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.

சுகானுபவம் உண்டாகும். நிர்வாகத்திறமை வெளிப்படும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். மாணவர்களது திறமை பளிச்சிடும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். மாதர்களது நோக்கம் நிறைவேறும். மக்களால் நலம் உண்டாகும். பிற மொழி, மத, இனக்காரர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியம். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 18, 23.

திசைகள்: வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: பொன்நிறம், பச்சை, ஆரஞ்சு, வெண்மை, நீலம்.

எண்கள்: 1, 3, 5, 6, 8.

பரிகாரம்: துர்கை, விநாயகர், சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது. சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும்.



மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் புதனும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. காரியம் தாமதப்படும். மனதில் ஏதேனும் சலனம் இருந்துவரும். மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாரப் பின்பகுதியில் அரசுப்பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு முன்னேற்றமான போக்கு நிலவிவரும். மாணவர்களது நிலை உயரும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.

தொழில்நுட்பத்திறமை பளிச்சிடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். சிவப்பு நிறப் பொருட்களால் அதிக ஆதாயம் கிடைக்கும். 22-ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். குடும்ப நலம் சீராகும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும். வழக்கில் சாதகமான திருப்பமும் தீர்ப்பும் கிடைக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். அலுவலகப்பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 23, 24.

திசைகள்: தெற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: கருஞ்சிவப்பு, பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 9.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. துர்கையம்மன், விநாயகரை வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x