Published : 15 Feb 2018 10:25 AM
Last Updated : 15 Feb 2018 10:25 AM

வார ராசிபலன் 15.02.2018 முதல் 21.02.2018 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். கவனமாகப் பேச வேண்டும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டும். குடும்பத்தினரால் மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி பரஸ்பரம் மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

பெண்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு, கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். மாணவர்களுக்குக் கல்விச் செலவு உண்டாகும். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 3, 4, 9

பரிகாரம்: முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கவும். பொருளாதார பிரச்சனைகள் அகலும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்த காரியத் தடைகள் நீங்கும். மனம் தெளிவடையும். சாமர்த்தியமான பேச்சு கைகொடுக்கும். தொழில், வியாபாரச் சிக்கல்கள் நீங்கி லாபம் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.  சிலருக்குப் புதிய பதவி கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்குத் திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

காரியத் தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு வாக்குவன்மையால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும். அரசியல்வாதிகள், எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். மாணவர்கள், கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை | எண்கள்: 1, 5, 6

பரிகாரம்: அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்கவும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். மனதித்ல் மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் தடை நீங்கி பணவரத்து கிடைக்கும். புதிய வர்த்தக ஆர்டர்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள், எந்திரப் பணியாளர்கள் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் மனக்கவலை ஏற்படும்.

கூடுதலாகப் பொறுப்புகளை ஏற்க வேண்டாம். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். கலைத்துறையினருக்கு துணிச்சல் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகள், இடமாற்றம், பதவி இறக்கத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு, கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 2, 5, 9

பரிகாரம்: ரங்கநாதரைத் தரிசித்து வணங்கி வர வேண்டும். மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். வியாபார நிமித்தமாகப் பயணங்கள் செல்வீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள்  திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்; உறவு பலப்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்களுக்குப் புத்தி சாதுரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள். கலைத் துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஒப்பந்தங்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

 அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 2, 6, 9

பரிகாரம்: அம்மன் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் திடீர் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். சுபச்செலவு ஏற்படும். முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் அனைத்தையும் தகர்ப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் போட்டியைச் சந்திக்க வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்கள் சிரத்தையாகப் பணிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். எதிலும் சந்தோஷம், நிம்மதி நிலவும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும்.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் சுணக்க நிலை நீங்கும். கலைத் துறையினரின் கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள், கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்குக் கல்வியை பற்றிய கவலை நீங்கும். தடையைத் தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 7, 8

பரிகாரம்:  சிவபெருமானு வில்வத்தால் அர்ச்சனை செய்யவும். மனக்குறைகள் நீங்கும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் வாக்குவாதங்கள் அகலும். எந்தக் காரியத்திலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கியிருந்த சரக்குகள் விற்பனையாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் சிறப்பான  பலன் கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்கள்,  வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.

காரியங்களைச் செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். கலைத் துறையினருக்கு, கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். வெளிநாட்டுப் பயண நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொள்வார்கள்.   முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள், ஊழியர்களிடம் கோபத்தைத் தவிர்க்க வேண்டும். மேலிடத்தைப் பற்றித் தவறாகப் பேச வேண்டாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறக் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

 அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

திசைகள்: மேற்கு, தெற்கு

நிறங்கள்: பச்சை, நீலம் | எண்கள்: 5, 7

பரிகாரம்:  பெருமாளை வணங்கவும்.  திட்டமிட்ட காரியங்கள் தொய்வின்றி நடக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x