Last Updated : 12 Oct, 2017 10:56 AM

 

Published : 12 Oct 2017 10:56 AM
Last Updated : 12 Oct 2017 10:56 AM

திருத்தலம் அறிமுகம்: சூரியன் வழிபடும் ஆலயம்

 

நெ

ல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்குள்ள சிறப்பு அதன் துணை நதிகளான சித்தாறு, கடனா நதி, பச்சையாறுக்கும் உண்டு. பச்சையாற்றை சியமளா நதி என்று பெருமையுடன் போற்றி புகழ்கிறார்கள்.

கங்கையே சியமளா நதியாக தோன்றி ஓடிக்கொண்டிருப்பதாகத் தலபுராணங்கள் பேசுகின்றன. திருநேல்வேலி தலபுராணத்தில் மந்திரேசுரச் சருக்கம் என்னும் பகுதியில் பச்சையாற்றின் பிறப்பு கூறப்படுகிறது. இதன் கரையில் நெல்லை-சேரன்மகாதேவி சாலையில் தருவை என்னும் ஊர் அருகே மேல ஓமநல்லூரில் சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தற்போதும் சித்தர்கள் வந்து சிவனை பூஜிப்பதாக நம்பிக்கை உள்ளது.

இங்குள்ள பனங்காட்டில் மரங்களின் கீற்றுகள், இசைக்கும் இசை பிரணவ மந்திரத்தினை எப்போதுமே ஒலிப்பது போலவே இருக்கிறது. அந்தளவுக்கு ரீங்கார இசை கேட்டுக்கொண்டே இருக்கிறது.

எம பயம் இல்லை

சுவாமி பெயர் ஸ்ரீபிரணவேஸ்வரர், தாயார் செண்பகவல்லி. இவ்வூரை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு எம பயம் கிடையாது. ஆவுடையின் மேலுள்ள லிங்கம் உடைந்துள்ளது. அதற்கு காரணம் மறுயுகத்தில் சிவலிங்கம் மீது அந்த வழியாக சென்ற பனைதொழிலாளி ஒருவரின் அரிவாள் பட்டதால் ஏற்பட்டது என வாய்மொழிக் கதை சொல்லப்படுகிறது. தற்போதும் அதே நிலையில் அவருக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனையெல்லாம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் வளர்பிறையில் மூன்று நாட்கள் சூரியன் தனது ஒளிக்கிரணங்களால் பிரணவேஸ்வரரை அலங்கரிக்கிறார். சூரியனே நேரில் வந்து வழிபடும் சிறப்பு தினங்கள் அவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x