Published : 25 Apr 2015 11:07 AM
Last Updated : 25 Apr 2015 11:07 AM

ஆவணங்கள் சரிபார்ப்பு அவசியம்

ஒரு வீடோ நிலமோ வாங்குகிறோம் என்றால் அந்தச் சொத்து நமக்கு உரிமையானது என்பதை எப்படி உறுதி கூறுகிறோம். சொத்து தொடர்பான ஆவணங்கள் எல்லாம் நமது பெயரில் பதியப்பட்டிருந்தால்தான் அந்தச் சொத்துக்கு உரிமையாளர் ஆவோம். ஆவணங்களில் பிழை இருந்தால் நமது உரிமை கேள்விக்குள்ளாக்கப்படும். இப்போது எல்லாம் காகிதத்தில் இருக்க வேண்டும். வெறும் வாக்கு, வாய்ச் சொல்லுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அதனால் சொத்து வாங்கும்போது ஆவணங்களைச் சரிபார்ப்பது முக்கியமான விஷயம்.

நாம் வாங்கும் சொத்தின் அனைத்து விவரங்களையும் அதன் மூலப் பத்திரத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும். சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

சொத்து தொடர்பான ஆவணங்களில் முக்கியமானது வில்லங்கச் சான்றிதழ். சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும். சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

அசல் ஆவணம் இல்லாமல் நகல் ஆவணத்தை வைத்து சிலர் சொத்தை விற்கத் துணிவார்கள். அப்படியிருக்கும்பட்சத்தில் நகல் ஆவணத்தை வைத்து இறுதி முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அசல் ஆவணம் உண்மையிலேயே தொலைந்துவிட்டதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். சில விஷயங்கள் வில்லங்கச் சான்றிதழில் வராமல் போக வாய்ப்புள்ளது. அசல் ஆவணங்களை வங்கியில் வைத்துக் கடன் வாங்கியிருக்கக்கூடும். அதனால் இவற்றைத் தெளிவாக உறுதிசெய்துகொள்வது அவசியம்.

மேலும் சொத்தை விற்பவர் கொடுக்கும் ஆவணத்தையும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து நகல் ஆவணத்தையும் வாங்கிச் சரிபார்க்க வேண்டும். இரண்டிலும் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா எனச் சரிபார்க்க வேண்டும். முக்கியமாக சர்வே எண், பத்திரப்பதிவு உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். பத்திரத்தில் உள்ள கையொப்பத்தைச் சரிபார்ப்பது அவசியம். உங்களிடம் தரப்பட்ட முழுவதும் போலியாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x